Tuesday, June 29, 2010

33 : சுவாசமும், மின் மற்றும் காந்த புலன்களும்.

காலை தியானத்தின்போது ஓம் சாண்டிங் பயிற்சி முடித்து 'நாடிசுத்தி' எனும் சுவாசப்பயிற்சியின்போது வலது நாசியை மூடி , இடது நாசி வழியாக உள்ளிருக்கும் காற்றை சீராக , மிக சீராக, காற்றை மெதுவாக நடத்தி , மெதுவாக, மிக மெதுவாக நடத்தி வெளி விடல் வேண்டும். முழுக்காற்றையும் வெளி விட்டபின் , அப்படியே அதே நாசியில் சுவாசக்காற்றை உள்ளிழுக்க வேண்டும்.முடிந்த மட்டும் நிறைவாக காற்றை இழுத்து, சுவாசப்பையை நிறைத்து , பின் இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக உள்ளிருக்கும் காற்றை சீராக , மிக சீராக, காற்றை மெதுவாக நடத்தி , மெதுவாக, மிக மெதுவாக நடத்தி வெளி விடல் வேண்டும். இப்படி மெதுவாக, மிக மெதுவாக என்பது ஒரு நடையாக அல்லாமல் ஒரு ஆமையின் நகர்வாக நகர்தல் நலம்.எவ்வளவு உங்களால் முடியுமோ அவ்வளவு தாமதமாக , ( இது நீண்ட காலமாக தியானம் செய்து வருபவர்களால் மட்டுமே முடியும்) இந்த நகர்தல் சற்று நின்றாலும் , அந்த 'அசைவற்றகணம்' உன் நுகர்வு தளம் முழுமைக்கும் ஒளிபிரவேசிக்கும். அக்கணம் நீ ஒளித்தன்மையையடைவாய்.இப்படி ஆழ்ந்து நீடித்த சுவாசப்பயிற்சி செய்வோர் இந்நிலையை அறிந்துணர முடியும். இந்த மூச்சுக்காற்றின் அடிப்படை ( இயற்பியல் சூத்திரம் ) என்னவென்றால், நாம் வலது நாசி வழியாக உள் இழுக்கும் காற்று நமது உணர்வு மண்டலத்திற்கு காந்தப்புலத்தை வலிமையடைய செய்வதாகவும், நமது இடது நாசி வழியாக உள் இழுக்கும் காற்று நமது உணர்வு மண்டலத்திற்கு மின் புலத்தை வலிமையடைய செய்வதாகவும் இருக்கிறது.இந்த இரண்டு ( காந்த மற்றும் மின் ) புலன்களும் வலிமையானவுடன் வினைபுரிய துவங்கி அது எண்ணங்களாக விகசிக்கிறது கண்கூடு. நமது தியான நிலையில் நாம், நமது எண்ணங்களை களைந்து ( கடந்து ) பிரவேசிக்க வேண்டியிருப்பதால், இந்த சுவாச ரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. நமது 'தியானித்தல்' சரியான நிலைமைக்கு வரும்போது , நமது மூச்சுக்காற்று வலது நாசியிலும் அல்லாமல், இடது நாசியிலும் அல்லாமல் நம் புருவ மத்தியிலுள்ள சுழுமுனை எனும் இடத்தில் , இட வல சிற்றசைவாக துடித்து ( அந்த குறு இட நிலையில், மின் புலமும், காந்த புலமும் வினை புரிய அந்த வினை ஒளியாக துலங்க) அந்த ஒளியே உன் நுகர்வுக்கு கிடைக்கிறது. நமது நுகர்வுக்கு அப்போது ஒளிமட்டுமே நுகர்வாகும். இந்த ஒளி நிலையே 'மின் காந்த அலை தளம்' .

No comments:

Post a Comment