Thursday, June 17, 2010

21 : மனதிடம் மாட்டிக்கொண்ட மனிதர்கள்.

நேற்று நள்ளிரவில் இது நடந்தது. எப்போதோஆங்கில சினிமாவில் பார்த்த ஒரு இடம் மாதிரி இருக்கிறது. பெரிய மலைத்தொடர். பச்சையே இல்லை, பெரும், பெரும் செந்நிறபாறைகளால் ஆன உயர்ந்தமலை.முகடுகள் வானத்தை தொட்டு, மேலே கவிழ்ந்து நிற்கிறது. மலையின் அடிவாரத்தில் ( மலையின் மடியில் )அமர்ந்து இருக்கிறேன். சுற்றும் சூழ மலைகள்.இன்னும் சிலகாட்சிகளில் குளறுபடிகள் 'லாஜிக்'கே இல்லை.( அனால் காட்சிகளின் அடிப்படையில் 'லாஜிக்' இருக்கிறமாதிரி தான் தோன்றுகிறது ) ( ஏன்? 'லாஜிக்' இல்லாத மாதிரியும் இருக்கிறது?'லாஜிக்' இருக்கிற மாதிரியும் இருக்கிறது?) எனது இடது பாதியில் மட்டும் உணர்கிறேன். வலது பாதி புலனாகவில்லை. ஒரு கருப்பு நிற 'ரிச்'சான( rich ) கம்யூட்டர். அதன் கீ போர்ட் பட்டன்கள் உருண்டை, உருண்டையாக வெண்ணிற முத்துபோல மின்னுகிறது. எதோ ஒரு டவுன் லோடு கொடுக்கிறேன். கம்ப்யூட்டர் ஸ்பீடாக இயங்குகிறது. ஆனால் டவுன் லோடு நிறைவு ஆகவில்லை. அதற்கான காரண காரியம் புரியவில்லை. ஏன்?, ஏன்?, மீண்டும் மனம் தேடுகிறது.
தேடி, தேடி ஓடினால் கொஞ்ச தூரம் போனால் பாதை அடைப்பட்டிருக்கிறது. எல்லா பாதைகளுமே சற்று, சற்று தூரத்தில் அடைப்பட்டு கிடைக்கிறதாக தகவல் வருகிறது. தேடல், தேடல், தேடல். ஒரே அவஸ்த்தையாக இருக்கிறது.மூச்சு திணறுகிறது, இந்த மாதிரியான அவஸ்தையை இதுவரை பட்டதில்லை. மனசு வலிக்கிறது. இனி உயிர் வாழவே முடியாது.
என் மனசை எதோ உருவம் இல்லாத பலமான மாயக்கரம் பிசைகிறது. மனிதன் இந்த தொந்தரவோடு வாழ்வதைவிட இறந்து போவது நிம்மதி.( இப்படி எவ்வளவு நேரம் நடந்தது என்பது பற்றி ஞாபகம் இல்லை. ) - இறந்து விட்டால் நிம்மதி எந்த பிரச்னையும் இருக்காது.
'திடுக்'கென தூக்கத்திலிருந்து எழுந்தேன்.கண் விழித்துப்பார்த்தேன்.கடிகாரத்தில் மணி இரண்டு. நல்லவேளை இது வெறும் கனவுதான், இது பச்சைப்பொய். அப்பாடா பிழைத்தேன் . இருந்தாலும் சந்தேகப்பட்டு வீட்டிலிருந்த கம்ப்யூட்டரையும் பார்த்தேன்.அது மூடி வைத்திருந்த படிதான் இருந்தது. நூற்றுக்கு நூறு இது கனவுதான்.
சிறுநீர் கழித்துவிட்டு வந்து,மீண்டும் படுத்து 'சரி நிம்மதியாக இனி தூங்குவோம்' என, கண்களை மூடி தூங்கப்போனால் , மீண்டும் அதே கம்ப்யூட்டர் காட்சிக்கு வருகிறது. மனசில் லேசாக வலி துவங்குகிறது. சற்றும் சூழ பாறையால் ஆன மலைகள். சே! வெறும் மனசால் வந்த கோளாறு.
எதோ டிரைவர் இல்லாத ரயில் போல மனம் தன்னிச்சையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு. எழுந்து அமர்ந்து கொண்டேன். இனி கண்ணை மூடி தூங்கப்போவதில்லை. ஏன் இந்த மனசு என்னை இப்படி வதைக்கிறது? ஏன்? இந்த மனம் என் கட்டுப்பாட்டிற்கு வர மறுக்கிறது? எனக்கும் மனசுக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி எப்படி ஏற்ப்பட்டது? இந்த மனசுக்கு சர்வ சுதந்திரத்தையும் கொடுத்து என்னையும் அதனிடமே முழுசாக ஒப்புக்கொடுத்து வைத்திருப்பது அப்போது அறிய வருகிறது. என் வசம் எந்த அதிகாரமும் இல்லை. சர்வ அதிகாரமும் தன் கையில் வைத்திருக்கிற சர்வாதிகாரியே இந்த மனம்தான். என் முழு உரிமையையும் அதனிடமே அடிமை சாசனம் போட்டு கொடுத்திருக்கிறேன்.தப்பிக்க முடியுமா? ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க?

1 comment:

  1. மன ஓடத்தை நிறுத்த வழி தெரியாமல் தான் அது பின்னாடி நாங்களும் ஓடி இன்று எப்படி கட்டுபடுத்துவது என்று தெரியாமல் ஏதேனும் வழி உண்டா என்று அறிய உங்கள் விளக்கங்களை படிக்கிறேன். விளக்கம் தரவேண்டிய நீங்களே கேள்வி கேட்டால் நாங்கள் என்ன செய்வது.
    நன்றியுடன்
    விஜய்.ச

    ReplyDelete