Monday, June 21, 2010

25 : நம் வள்ளலுக்கு ஒய்வு கொடுப்போம்.

உங்கள் மனம் உங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, உங்களுக்காக இடையாறாது, இரவு பகலாக உழைத்து வந்திருக்கிறது. அல்லது அதன் மீது நீங்கள், சற்றும் ஈவு இரக்கமின்றி, கொஞ்சமும் தாட்சண்யமின்றி அதனிடம் - உங்கள் சுயநலத்திற்காக - இடையாறாது ( கொஞ்ச நேரமும் ஒய்வு இன்றி ) வேலை வாங்கியிருக்கிறீர்கள். உங்கள் மனமோ தன் சக்தியையும் மீறி உங்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறது 'இன்னும்' ஒரு அடிமைப்போல . அதனிடம் தன்னையே தியாகம் பண்ணும் வள்ளல் தன்மையும் உள்ளது. நீங்களோ ஒரு சொகுசான பேர்வழி. அனால் உங்கள் மனம் அப்படியல்ல! உங்களை முழுதுமாக உங்கள் மனதிடமே ஒப்படைத்துவிட்ட சோம்பேறி நீங்கள். நீங்கள் ஒரு மாபெரும் சோம்பேறி.உங்களுக்காக உங்கள் மனம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம், ஏராளம். அது பட்ட கஷ்டமும் கொஞ்சமல்ல! உங்களுடைய அனைத்து தேவைகளையும் அது நிறைவேற்றியிருக்கிறது. உங்களுடைய துர் இச்சைகளையும் கூட அது நிறைவேற்றி கொடுத்துள்ளது. உங்களுக்கு அரணாக, பாதுகாவலாக, உங்களை ரட்சிக்கும் ரட்சகனே உங்கள் மனம தான். அப்படிப்பட்ட உங்கள் மனதுக்கு கைமாறாக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ? குறைந்தபட்சம் உங்கள் மனதுக்கு கொஞ்சம் ஓய்வாவது கொடுக்கலாம். இன்றிலிருந்து அதற்க்கு கொஞ்ச, கொஞ்ச நேரம் ஒய்வு கொடுக்க ஏற்பாடு செயுங்கள் உண்மையாகவே நீங்கள் நன்றியுள்ளவராக இருந்தால்! நீங்கள் உங்கள் மனதுக்கு சற்று ஒய்வு கொடுக்க விரும்புபவராக இருந்தால் இந்த உதவிக்குறிப்பை கவனித்து படியுங்கள்.

* குறிப்பு : உங்கள் மனம் என்பது உங்களை காப்பாற்றிவரும் , உங்கள் தன்முனைப்பு அமைப்பு. அது தன்னிகரற்ற சக்தி. அது செயல்படும் விதமானது உங்களை மையப்படுத்தியே செயல்படும். உங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் , உங்களுக்கு இடையூறு உண்டாக்கும் செயல் ஏதாவது ( அல்லது அதற்க்கான காரணங்கள் ஏதாவது ) நடக்கிறதா? என்பதிலேயே கவனமாக இருக்கும். உங்களை சுற்றி நடக்கும் செயல்களில் மட்டுமல்ல , உங்களுக்குள் எழும் எண்ணங்களை கூட அவ்வண்ணமே கவனிக்கும் தன்மையுடையது. அவ்வளவு துல்லியமான கவனம் கொள்ளும் உங்கள் மனதுக்கு ஒய்வு கொடுப்பது என்பது , அதனுடைய துல்லிய தன்மைக்கு குறையாத கவனத்துடன் விழிப்புணர்வோடு இந்த மனதிற்கு சற்று ஒய்வு அளிக்கவேண்டும். நீங்கள் ஒரு தூய விழிப்புணர்வோடு ஏகாந்த தன்மையில் கவனம் பிசகாமல் நடந்து வந்தால் -( இப்போது மனம் சற்று சும்மா இருக்காது. அவ்வப்போது இயங்க தொடங்கும். பாவம் அதன் பழக்க தோஷம் அது) - இப்போது மனதோடு வாஞ்சையாக பேசி அதை ஓய்வெடுக்க செய்ய வேண்டும். உங்கள் மனதுக்கு அவ்வப்போது ஒய்வு கொடுப்பதுதான் நீங்கள் அதற்க்கு செய்யும் கைம்மாறு. இவ்வளவு நாள் அது உங்களை காப்பாற்றி வந்ததுபோல, நீங்களும் அதை காப்பாற்ற வேண்டும். இதுவரை ஒரு தீவிர விழிப்புணர்வு உங்கள் மனதிடம் செயல்பட்டது போல , இனி அதேயளவு தீவிர விழிப்புணர்வை உங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் அவ்வளவே.

No comments:

Post a Comment