Friday, June 18, 2010

22 : 'நான்' எனும் ஆளுமை - ஓஷோ

உங்கள் தனி மனித தன்மையை கண்டுபிடிப்பதில் உங்கள் சக்தியை ஈடுபடுத்துங்கள். இதுவே , உங்கள் பிறப்பிலிருந்தே உங்களுடன் நீங்கள் கொண்டு வந்திருப்பது . தனிமனித தன்மையே உங்களின் சாரமான இருப்பு. நான் எனும் உங்கள் தன்முனைப்பான ஆளுமையோ சமுதாயத்தால் உங்களுள் உருவாக்கப்பட்டது. அவர்கள் உங்களை என்னவாக ஆக்க விரும்பினார்களோ அப்படி ஆனதே ஆளுமை.
ஆனால் நீங்கள் மட்டுமல்ல இப்படி இருப்பது . உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தம் ஆளுமையை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். ஆளுமையை தவிர வேறெதுவும் இருப்பதே அவர்களுக்கு தெரியாது. தம்மையே அவர்கள் முழுமையாக மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நடிகர்களாக, வெளிவேசக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். மதவாதிகள், அரசியல்வாதிகள், பெற்றோர்கள் ஆகியோரின் கைகளில் ஆடும் பாவைகளாக அவர்கள் ஆகி இருக்கிறார்கள். தாம் ஒருபோதும் செய்ய விரும்பியிராத காரியங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் பெரு விருப்பம் கொண்டிருக்கிற விதமான செய்கைகளை அவர்கள் செய்யாதிருக்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமான முறையில் அவர்களின் வாழ்க்கை பிளவு பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒரு போதும் அமைதியாக இருக்க முடிவதில்லை. அவர்களின் இயற்கை ( தனி மனித தன்மை ) தன்னை மீண்டும், மீண்டும் முன் நிறுத்தும் . அது அவர்களை அமைதியாக இருக்கவிடாது. அனால், அவர்களின் ஆளுமை எனப்படுவதோ அவ்வியற்கையை தொடர்ந்து ஒடுக்கிக்கொண்டே போகும். உணர்வற்ற தளத்துக்குள் மென்மேலும் ஆழமாக அதை பதித்துக்கொண்டே இருக்கும். இந்த மோதல் உங்களையும் உங்கள் ஆற்றலையும் பிரிக்கிறது. ஆனால் தனக்கெதிராக தானே பிரிந்த வீடு அதிக நாள் நிலைக்க முடியாது.
இதுவே மனித பிறவிகளின் முழு அவலமுமாய் இருக்கிறது.

No comments:

Post a Comment