Thursday, June 24, 2010

31:அறி உணர் நுட்ப மட்டங்கள்.

இந்த பிரபஞ்சம் எப்படி இருக்கிறதோ - ஒரே முழுப்பிரபஞ்சமாக, பால்வீதி மண்டலமாக, நட்சத்திரங்களாக, பூமியாக, கல்லாக, மண்ணாக, நீராக, செடி,கொடிகளாக, பொருளாக, உயிராக,மூலக்கூறாக,உயிர்செல்லாக, அணுவாக, அணுவினுள் அமைந்த மின் துகள்களாக, துகள்களை உருவாக்கும் மின் காந்த அலைகளாக, மிக நுட்பமான குவாண்ட ஆற்றலாக - இப்படி பல்வேறு மட்டங்களில் இப்பிரபஞ்சத்தை நாம் அறியமுடியும்.
நாம் எங்கிருந்து அளவிடுகிறோமோ அந்த தளத்தை 'ஆதாரத்தளம்' (frame of reference) என்று அழைக்கலாம். குவாண்ட ஆற்றலில் துவங்கி , மின் காந்த அலை,அணுத்துகள், அணு, மூலகம், கல், மண், பூமி,நட்சத்திரம் ,பால்வீதி, பிரபஞ்சம் இப்படி விகசிக்கிறது.
அதுவே அடிப்படை நுட்பமாக நோக்கினால், பிரபஞ்சம்,பால்வீதி, நட்சத்திரம், பூமி, உயிர் , மூலகம், அணு, மின் காந்த அலைகள், குவாண்ட ஆற்றல் என நுணுகிக்கொண்டு போகிறது.
இதில் மனிதன் இருக்கும்(frame of reference) 'ஆதாரத்தளம்'எதுவென அறிவீர்களாக!

நம்மை விட அகண்ட,விரிவான பூமி, நடசத்திரம் , பால்வீதி, பிரபஞ்சம் - இந்த 'ஆதாரத்தளங்களை' அறிந்துணர நாம் நமக்கு வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டும்.அல்லது தொலை நோக்கியால் பிரவேசிக்கவேண்டும் வெளி நோக்கி.


மனிதனின் கிடை மட்டத்தில் உள்ள செடிகொடி,பொருள்,காடு, மலை, நதி மற்றும் நீங்கள் எப்படி எதுவெல்லாம் உண்மை என நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ அவைகள் அனைத்தும். இப்போது துலங்கும் நம்முடைய ஐந்து புலன்களாலேயே அறிந்துணர முடியும்.இதுவே நமது 'ஐம்புலன்ஆதாரத்தளம்'.
மனிதனை விட சுருக்கமான மூலகம்,அணு,மின்காந்த அலை, குவாண்டம் ஆற்றல். போன்ற மிக நுட்பமான அறியுணர்வை,('ஆதாரத்தளங்களை') - பொருட்களால் கட்டப்பட்ட இந்த உடலை முழு ஓய்வில் இருத்தி நாம் 'நம்முள்ளே'( inner travel) பிரவேசிப்பதன் மூலமே - உடலை அசைவின்றி ஓய்வில் இருத்தினால் மனம் தானே ஓய்வில் ஒடுங்கும்- மனம் கடந்து, நமது அடிப்படை இருப்புணர்வில் ( தியானத்தில்) நம் அறியுணர்வை நிறுத்தினால் அணுத்தளம்,மின்காந்த அலைத்தளம், குவாண்ட ஆற்றல்தளம் ஆகிய இந்த 'ஆதாரத்தளங்களில்' சஞ்சரிக்க முடியும்.
நாம் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது நாம் இருக்கும் ( மனித மட்டத்தாலான 'ஆதாரத்தள' )உணர்வேயில்லாது இருக்கிற நிலையே அணுத்தளம்.( 'அணு ஆதாரத்தளம்' ).
நம் புருவ மத்தியில் தோன்றி பிரகாசிக்கும் ஒளியே மின்காந்த அலைத்தளம்.( 'மின்காந்தஆதாரத்தளம்' ).
எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் பூரண தன்மையே குவாண்ட ஆற்றல் தளம்.( 'குவாண்ட நிலை ஆதாரத்தளம்' ).

1, பிரபஞ்ச நிலை ஆதாரத்தளம்
2, உடுமண்டல நிலை ஆதாரத்தளம்
3, நட்சத்திர நிலை ஆதாரத்தளம்
4, கிரகநிலை ஆதாரத்தளம்
5, உயிர்நிலை ஆதாரத்தளம் ( மூளை, மனம்)
6, மூலகம் ஆதாரத்தளம்
7, அணு நிலை ஆதாரத்தளம்
8, மின்காந்த அலை ஆதாரத்தளம்
9, குவாண்ட நிலை ஆதாரத்தளம்

No comments:

Post a Comment