நீங்கள், நான், இந்த பூச்சி, அந்த குதிரை, அந்த நாய், இதோ இந்த மரம், பூத்து குலுங்கும் இந்த கொடி,ஒரு எறும்பு, எதுவுமே தனி, தனி செயல்பாடு உடையதாகவே இருக்கிறது. இந்த பூமி, அந்த நிலா, புதன், சுக்கிரன், வியாழன், சனி என கிரகங்களும் தனி, தனி செயல்பாடுகள் உள்ளதுதான். நம்மோட சூரியன், மற்றும் நட்சத்திரங்களும் தனி,தனி செயல்பாடுகள் உள்ளவைதான். உங்களோட பால்வீதி மண்டலம் ,அதேப்போன்ற கோடிக்கணக்கான மண்டலங்கள் அனைத்துமே தனி,தனி செயல்பாடுகள் கொண்டவைதாம். ஏன்? ஒவ்வொரு அணுக்களுமே தனி, தனி செயல்பாடுகள் கொண்டவைதான். நம் தியானத்தில் , தியானத்தின் அமைதியில் , அமைதியின் ஆழத்தில், வெளியுலக தொடர்பை தாண்டி, எண்ணம்,அக காட்சிகளையும், மனதின் செயல்பாடுகளையும் தாண்டி, மனமற்ற வெளியில் , உடல் இருப்புணர்வையும் கடந்து, ஆழ்ந்த மோனத்தில்,- நான், நீ, அது என்ற விகல்பம் இன்றி, அனைத்து பொருட்களின் அடிப்படை இணைப்பாக , விகல்பமற்ற ஓர் ஒர்மையுணர்வு துலங்குகிறது. இது ஒவ்வொரு பொருளின் அடிப்படை தன்மையே . ஒவ்வொரு அணுவின் அடிப்படைத்தன்மையும் இதுவே. இதன் உணர்வுதன்மை மின் தன்மையதாக இருக்கிறது. அனைத்து பொருட்களுமே அடிப்படையில் மின் தன்மையதாகவேயுள்ளது.இந்த பிரபஞ்சம் தொடங்குமுன் இருந்ததும் வெறும் மின் மட்டுமே! இந்தநிலைமின், நேர் மின், எதிர்மின், என விகல்பமானதாலேயே இப்பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. ( இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை 'அலகே' அணுதான். ( நமது அடிப்படை 'அலகு'ம் அணுதான். ) அந்த அணுவும் மூன்றுவித மின் துகள்களாலானது . 1,நேர்மின் துகள், 2, எதிர்மின் துகள், 3, நிலை மின் துகள். ஒரு அணுவின் உருவத்தில் நூறு ட்ரில்லியனில் ( 100,000,000 ) ஒரு பகுதிதான் கெட்டியான உட்பகுதி ( கருமையம்) இந்த பகுதியில் நேர்மின் துகளும், நிலைமின் துகளும் அடர்ந்து பிணைந்துள்ளது. அணுவின் வெளிவட்டத்தில் எதிர்மின் துகள்கள் சுற்றிவருகிறது. இடையில் இருக்கும் மீதியெல்லாம் வெற்றிடம்தான். பெரிதாக இருக்கும் இவ்வுலகம் நீங்கள், உங்கள் நாற்காலி, இந்த கம்ப்யூட்டர், ஆகிய யாவும் பெரும்பாலும் வெற்றிடத்தால் ஆனதுதான். இருப்பினும் நமது உடலும், பொருட்களும் கெட்டியாக இருப்பதற்கு காரணம் அணுவின் கருவைச்சுற்றி மேகம்போல் சூழ்ந்திருக்கும் மிக விரைவாக சுற்றிவரும் எதிர்மின் துகள்களால்தான்.) இந்த அகிலமே வெறும் மின்னோட்டமட்டும் உடையதுதான்.அந்த மின் தன்மையே நமது தியானத்தில் உணரப்படுகிறது.
இந்த ஒர்மையுணர்வே அனைத்தையும் இணைக்கிறது.நமது ஆழ்ந்த அடிப்படை உணர்வான இந்த மின்தன்மை நம்மையும் தன்னோடு இணைக்கிறது.
No comments:
Post a Comment