ஐந்து வித தன்மைகள் இருக்கிறது. 1,உலகு , 2,உடல் , 3,உள்ளம் , 4,உயிர் , 5,உண்மை . இதில் உண்மையை சூழ்ந்து உயிர் உறையாக பாது காக்கிறது. உயிரை சூழ்ந்து உள்ளம் உறையாக பாதுகாக்கிறது.உள்ளத்தை சூழ்ந்து உடல் உறையாக பாதுகாக்கிறது.உடலை சூழ்ந்து உலகு உறையாக பாதுகாக்கிறது.
அதாவது உலகு எனும் உறைக்குள் உடல் இருக்கிறது . உடல் எனும் உறைக்குள் உள்ளம் இருக்கிறது . உள்ளம் எனும் உறைக்குள் உயிர் இருக்கிறது . உயிர் எனும் உறைக்குள் உண்மை இருக்கிறது . இது மனித வாழ்வுக்குமட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்துக்கே பொதுவான நிலைமையாக இருக்கிறது . உலகு =இப்பிரபஞ்சம் . உடல்= ஸ்தூலப் பொருட்கள் , உள்ளம் = வேதியல் வினைகள் , உயிர்= ஈர்ப்புவிசை,காந்தப்புலன், மின்னோட்டம், உண்மை= உண்மை. அதாவது எப்போதுமே இருப்பது உண்மை . உண்மையிலிருந்து விகசிப்பது உயிர். உயிரிலிருந்து விகசிப்பது உள்ளம். உள்ளத்திலிருந்து விகசிப்பது உடல். உடலிலிருந்து விகசிப்பது உலகு. உள்ளிருப்பது உண்மை, அடுத்த அடுக்கில் உயிர், அடுத்த அடுக்கில் உள்ளம், அடுத்த அடுக்கில் உடல் , அடுத்த அடுக்கில் உலகு ஆனால் இவை அனைத்தும் 'ஒன்று' தான், நீங்கள் உண்மையில் இருந்தால்!
No comments:
Post a Comment