Tuesday, June 22, 2010

27 : மிக அடிப்படையான ஒரு விஷயம்.

ஆன்மீக உலகில் உள்ள அனைவருக்கும் வணக்கம். 'மிக அடிப்படையான' ஒரு விஷயத்தைப்பற்றி இப்போது பார்ப்போம். இதுவரை ஞானம் அடைந்த பெரியோர்களில் அநேகமானவர்கள், ஞானமடைந்த பின் அந்த ஞான நிலையுணர்வை மக்களுக்கு தெரிவிக்கும் வழியாக - தங்களின் பழைய மனதையே உபயோகிக்கின்றனர். என்பது கண்கூடு. இதனாலேயே உலகில் இத்தனை வேறுபாடுகளாலான மதங்கள் தோன்றியுள்ளன. அதாவது ஞான நிலை என்பது, இந்த மனித உயிருக்கு எல்லா கால கட்டத்திலும், எல்லா கலாசாரத்திலும், எல்லா மொழிகளிலும், எல்லாவித பழக்க, வழக்கம் உள்ளவர்களிடையேயும் ஒரே விதமாகவே நிகழ்ந்திருக்கிறது. புத்தரிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், யேசுவிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், முகமது நபியிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், இந்து மத முனிவர்களிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், மகா வீரரிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும் ஒரு இம்மியளவு கூட வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இது சரியாக ஆன்மீகத்தில் உள்ள அனைவரும் எந்த மறுப்புமின்றி ஒப்புக்கொள்ளும் உண்மை. ஒரு வேதியியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான். ஒரு இயற்பியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ளஅனைத்துநாடுகளிலும்,அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஒரு கணிதவியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான். ஒரு தாவரயியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஏன்?
உயிரியலுக்கே கூட 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஆனால்? இந்த ஆன்மீக இயலுக்கு மட்டும் ஏன் இத்தனை வித மதங்கள்? இத்தனை வித கடவுள்கள்?, இத்தனை வித நிறுவனங்கள், இத்தனைவித குருமார்கள், இத்தனை விதமான போதனைகள்,இத்தனை விதமான வழிகாட்டல்கள்?. இந்த ஆன்மீகஇயலுக்கும் ஒரு அறிவியல் விளக்கம் அவசியம் தேவை. சொல்லவேண்டிய விஷயங்களை நேரிடையாக சொல்லக்கூடிய அறிவியல் விளக்கம். அது எல்லா நாட்டினருக்கும், எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழியினருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும் .அந்த முயற்சியில் தான் இந்த கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆம், அறிவியலான ஆன்மீக நிரூபணதுக்காக!.

No comments:

Post a Comment