Tuesday, June 22, 2010
26 : இயற்கை விதி
நாம் தியானம் முடிந்து கண்விழித்து பார்க்க துவங்கியவுடன் மனம் விழித்துக்கொள்கிறது. மீண்டும் அது தன்னியல்பிலேயே ஒடதொடங்கிவிடுகிறது.சரி, நம் மனதின் இயல்பு எப்படிப்பட்டது என பார்ப்போம்.உதாரணமாக, நம் முன்னாள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு இளம் ஜோடி சந்தோசமாக, சிட்டென பறந்து போகிறதைப்பார்த்ததும்; ஆகா! இந்தமாதிரி வாய்ப்பு நமக்கு உண்டா? என கேள்வி கேட்டு, பொருத்திப்பார்க்கிறது மனம்.( அப்படி வாய்ப்பு இருந்தால் , மனம் நிறைவடைகிறது. இல்லையென்றால் ' தனக்கு ஒரு புது மோட்டார்சைக்கிள் இல்லை', அல்லது 'என் மனைவி இந்த பெண்ணைப்போல' அவ்வளவு அழகாக இல்லை.அல்லது, இந்த ஜோடி மாதிரி உணர்வை நாமும் உணர்ந்து பார்க்கவேண்டும் என எண்ணுகிறது.) 1, அதாவது உங்கள் மனதுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு நல்ல தொடர்பு இல்லாத பட்சத்தில் , உங்கள் மனம் இப்படி தன்போக்கில் போக வேண்டியிருக்கிறது. உங்களுக்கு தொடர்பு இருந்தால் , உங்களால் உங்கள் மனதுக்கு பதில் சொல்லி அதை சமாதானப்படுத்த முடியும். 2,உங்கள் மனம் தனக்கென சில விதிகளை கற்றுக்கொண்டிருக்கிறது. உங்கள் மத விதி, உங்கள் ஜாதி விதி, உங்கள் குடும்ப விதி , 'உங்களி'ன் பொருளாதார விதி. இப்படி இன்னபிற விதிகள். உங்களின் மனதை இனி, இயற்கை விதி என்ன? என ஆராய சொல்லுங்கள். தியானம் முடித்து எழும்போது உங்கள் மனதிடம் இதை சொல்லுங்கள். நீங்கள் நீண்ட நாட்களாக தியானம் செய்பவராக இருந்தால் இந்த ஆராய்ச்சிக்கு உடனடி பலன் ஏற்படும். இயற்கை விதி என்பது , இந்த பிரபஞ்ச விதி, நம் உடல் இயங்கும் விதி, இப்படிப்பட்ட அடிப்படை விதிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment