Saturday, June 26, 2010

32 ; உணர்வு தகவமைப்பு.

நமது காலை நேர ஆழ்ந்ததியான நிலையில் நமது புருவ மத்தியில் ஒளிப்பிரவாகம் தோன்றும். அந்த ஒளிப்பிரவாகம் நம் உடல் முழுவதும் சுடர்வதாகவும், நம் ஒவ்வொரு அங்கமும் சுடர்வதாக, நம்முடைய ஒவ்வொரு திசுவும் சுடர்வதாக, நம்முடைய ஒவ்வொரு அணுவுமே சுடர்வதாக, ஏன் அந்த அணுக்களிலுள்ள நேர்மின் துகள்கள், எதிர்மின் துகள்கள், நிலைமின் துகள்களும் சுடர்வதாக பாவித்து வர அந்த ஒளிச்சுடர் உணர்வு தண்டுவடத்தில் சுடர்ந்து , அந்த ஒளித்தண்டுவடம் பிளந்து (ஒளி துலங்கி 'நான்' எனும் 'நிழலான கவனம்' மறைந்து தொலைய ) இப்போது ஏக ஒளிப்பிரவாகம் தோன்றும். எப்போதும், எங்கும், எதிலும் ஒளியே . இந்த ஒளித்தன்மையே மின்காந்த அலைத்தளம். இந்த ஒளிநிலையில் நீங்கள் எவ்வளவு நேரம் நீடிக்க முடியுமோ அந்த அளவுக்கு உங்கள் அறிவு தெள்ளத் தெளிவாகும். ( இது நூற்றுக்கு நூறு சத்தியம்) இது அறிவில் இப்படி மாற்றத்தை செய்வதோடல்லாமல், உங்கள் உள்ளே நிகழும் உணர்வு தகவமைப்பையும் சீர் படுத்துகிறது. ( இந்த உணர்வு தகவமைப்பே சர்வமும்) ஆகையினாலேயே புத்தர்பிரான் இந்த உடலுக்கு வெளியே நிகழும் பிரபஞ்சத்தைப்பற்றியோ, மக்களால் நம்பப்பட்டுக்கொண்டிருந்த, இந்த அண்ட புவனங்களை ஆக்கி, காத்துக்கொண்டிருப்பதான 'கடவுள்' பற்றியோ அவர் எதுவும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது இப்படியிருக்க, இந்த தியான நிகழ்வை நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே செய்துவரல் வேண்டும். இது மிக முக்கியம். இதை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே செய்து வருவது , உங்கள் உணர்வுதன்மையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தலைசிறந்த உத்தி.

No comments:

Post a Comment