Wednesday, June 9, 2010

18 : ஒரு நகைச்சுவை

எனக்கு இந்த ஜில்லா, இந்த தாலுக்கா, இந்த கிராமத்தில் 160/3சர்வே எண்ணின் படி 5 ஏக்கர் 42 சென்ட் நிலம் எனக்கு சொந்தமானது. அது என்னுடையது. இந்த உலகில் உள்ள எவரும் இந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அது என்னுடையது. என்னிடம் ஒரு பஜாஜ் கம்பெனி மோட்டார் சைக்கிள் உள்ளது. அதுவும் என் பெயரில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டு அதுவும் எனக்கு சொந்தமானது. நான் நான்கு பசு மாடு வளர்க்கிறேன் அவைகளும் எனக்கு மட்டுமே சொந்தம். நான் விரும்பினால் அதற்கு தீனி போடலாம், அதன் தாகத்துக்கு தண்ணீர் வைக்கலாம் , விருப்பமில்லாவிட்டால் அவைகளை அப்படியே கவனிக்காமல், பட்டினி போட்டு 'கொல்ல' முடியும். அது என் உரிமை. போன வாரம் இரண்டாயிரம் கொடுத்து சந்தையில் இரண்டு வெண்ணிற ஆட்டுக்குட்டி வாங்கினேன். அதுவும் எனக்கு சொந்தம். நான் விரும்பினால் அதனுடைய ஒரு காதை மட்டும் அறுத்து , நெருப்பில் சுட்டு தின்னலாம். எவனும் கேட்க முடியாது.ஏன் அதை கொன்று கறி சமைத்து உண்ணலாம். (உலகில் உள்ள எல்லா ஆடுகளுமே இதற்குதான் கொல்லப்படுகிறது) அல்லது அந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் கட்டப்பட்டிருக்கிற கயிற்றை தரித்து விட்டு , எங்கோ போய் பிழைத்துக்கொள்ளுங்கள் என சுதந்திரமாக திரியவிடலாம். எனக்கு சொந்தமாக மனைவி ஒருத்தி, இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு கேள்வி. என்னுடைய கண் அணுக்களால் ஆனது, என்னுடைய காது அணுக்களால் ஆனது, என்னுடைய வாய் அணுக்களால் ஆனது,என்னோட மூளை அணுக்களால் ஆனது, என்னோட ஒவ்வொரு உறுப்பும் , எலும்புகளும், ரத்தமும் அணுக்களால் ஆனது. என் உடல் பல கோடி அணுக்களால் ஆனது. சரி, இது இப்படி இருக்க-
என்னோட உடலில் உள்ள எல்லா அணுக்களும் இந்த பிரபஞ்சத்துக்கு சொந்தம். இந்த பிரபஞ்சம் முழுக்க உள்ள அனைத்து அணுக்களும் என் அணுக்களும் ஒரே மாதிரியானது தான். இந்த உடலிலுள்ள அனைத்து அணுக்களும் இப்பிரபஞ்சத்துக்கு சொந்தமானது என்றால்! அப்போ நான் என்பது என்ன?

No comments:

Post a Comment