Thursday, July 8, 2010

39: மனம் அறிவின் வாகனம்.

அறிவு, 'மனம்' எனும் வாகனத்தில் ஆரோகணிக்கிறது.அந்த மனமோ சதா அலைபாய்கிறது. ( அதன் அமைப்பு அப்படி ) அறிவும் அதன் கூடவே அலைய வேண்டியிருக்கிறது. ( அறிவு ஜடதுக்குள் பிரவேசித்ததின் விளைவு! ) நமது தியானத்தில் அந்த வாகனத்துக்கு ஓய்வு கொடுத்து கட்டிப்போட்டுவிட்டு, அறிவானது தனித்து நிற்கும்போது, தனித்து 'சும்மா இருக்கும்'போது அது தன்னில் லயிக்கிறது. அந்த லயிப்பில், லயத்தில் அறிவு தன்னையே அறிகிறது.
அந்த அகண்டாகார பேரறிவுக்கு 'தான்' ஜடப் பொருளுக்குள் புகுந்ததின் நோக்கம், தனக்கு தெரிய வருகிறது. இது அவரவர் அவரவரின் தியான பொழுதுகளில் அறிந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. அந்த அகண்டாகார பேரறிவு தன்னையறிய பொருளில் நுழைந்து , உயிராகி, புல்லாகி, பூண்டாகி, செடி கொடியாகி, விருட்சமாகி ,ஊர்வன, நகர்வன, பறப்பன, என பல்வேறு நிலைகளில் பரிணாமப்பட்டு மனிதராய் முதிர்வடைந்து நான் யார்? எனும் கேள்வி துவங்கி, இதை அறிவது அறிவே என்றறிந்து , இந்த அறிவு யாது? என்றாய்ந்து, தியானத்தில் தன்னில் மூழ்கி தன்னையறிகிறது. அந்த அகண்டாகார பேரறிவின் தேடலே இந்த 'பிரபஞ்ச ரகசியம்'.

No comments:

Post a Comment