1, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் , ஏன் அனைத்து அண்டங்களுமேக்கூட ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. ஒவ்வொரு அணுக்களுமே ஒன்றை ஒன்று சார்ந்தே செயல்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒரு தனித்த 'தனிமுதல்' உண்டு என்றால் அது ஒளியே ஆகும். ஒளி ஒரு சார்பற்ற தனி முதல். 2, காலம் : காலம் என்பது பொருட்களால் ஆன உலகுக்குதான் முப்பரிமாணமாக தோன்றுகிறது. அதுவும் கூட மனதின் தோற்றமே. எதிர்காலம், இறந்த காலம் என்ற ஒன்று கருத்து ரீதியானது தான். அப்படி இரண்டு காலங்கள் இல்லவே இல்லை. பொருள் மட்ட 'ஆதாரத்தள'த்தில் மட்டுமே இந்த கருத்துரு தோன்றுகிறது. ஒரு பொருள் சார்பியல் வேகத்தில் ( ஒளியின் வேகம் ) பயணிக்கும்போது , காலம் மட்டும் அல்லாமல் இடமும் தம் அளவுகளில் மாறுபடுகிறது. சரி ஒளியின் வேகத்திற்கே ஒரு விண்கலம் ஓடக்கூடியதாக இருந்தால் , அங்கு கடிகாரமும் ஓடாமல் காலமே ஸ்தம்பித்துவிடும். எவ்வளவு தான் நாம் சார்பியல் தத்துவத்தை புரிந்து கொண்டாலும், நம்மை அறியாமல் நம் ஆழ்மனதில் ஒரு சார்பற்ற தனிமுதல் காலம் ஒன்று இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது. உண்மையில் அப்படியொரு சார்பற்ற காலம் இல்லவே இல்லை.
இந்த பிரபஞ்சம் என்றோ ஒரு காலத்தில் தோன்றியதாக எண்ணுகிறோம். அக்காலத்திற்கு முன்பு இப்பிரபஞ்சம் என்னவாக இருந்தது? என்ற கேள்வி உடனே எழுகிறது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் . காலமும் இடமும் இந்த பிரபஞ்சத்திற்குள் தான் இருக்கிறது .
ஆனால் பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை.
அதேபோல பிரபஞ்சத்திற்கு வெளியே என்று ஒரு இடமும் இல்லை, பிரபஞ்சத்திற்கு முன்போ , அல்லது மறைவுக்கு பின்னாலோ காலமும் இல்லை. இடமும் இல்லை. பிரபஞ்சம் தோன்றிய பிறகே காலமும் இடமும் தோன்றியன.
இந்த பிரபஞ்சம் விரிந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கும்பொழுது எதில் விரிந்துகொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது. பதில் பிரபஞ்சத்திற்கு வெளியே இடம் எதுவும் கிடையாது.
* குறிப்பு
1,ஒளி ஒரு சார்பற்ற தனி முதல்
2, ஒளி வேகத்தில் ஒரு பொருள் பயணித்தால் அந்த பொருளே மறைந்துவிடும்.
3, பிரபஞ்சத்திற்கு முன்போ , அல்லது மறைவுக்கு பின்னாலோ காலமும் இல்லை. இடமும் இல்லை.
4,நமது தியானத்தின் போது நாம் அந்த ஒளி நிலையில் லயிக்கும்பொழுது காலம் பற்றிய உணர்வு இருப்பதில்லை. ஏன்? ஒளி ஒரு சார்பற்ற தனி முதல்.இது பொருள் கடந்த நிலை,இதுவே காரணம்.
'காலம்' என்பது பொருட்களால் ஆன உலகுக்குதான். ஒரு உதாரணம். நமக்கு காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகள் உண்டு. நமக்கு அடுத்துள்ள ஒரு நட்சத்திர வாசிக்கு ( கற்பனைதான் ) இந்த வேளைகள் கிடையாது. அவர்களுக்கு ஒரே வேளைதான்.ஏனெனில் அங்கு எப்போதுமே ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கிறது. இதுபோலதான் காலத்தின் நிலையும்.
நன்றி: அணு, உயிர், அண்டம். கலைக்கதிர், கோவை.
அநுபூதி நிலையை அடைந்த ஒருவருக்கு எந்த கேள்வியும் மனதில் எழுவது கிடையாது. அவருக்கு மனமே செயல்படுவது கிடையாது. அவர் அனைத்து கேள்விகளையும் கடந்து விட்டவர். அவர் நிறைவானவர், பூர்த்தியானவர்.அங்கு அவரே கிடையாது. அது எந்த சலனமும் அற்ற வெளி. அங்கு எதுவும் சூல் கொள்வதில்லை. தனது தேக உணர்வையே கடந்து வாழ்ந்தவர்களையும் கேள்விப்பட்டு இருக்கிறோம். மனம் நிலவுகிற இடத்தில தான் சந்தேகங்களும்,கேள்விகளும்.
கவனிக்கவும்: பிரபஞ்சம் தோன்றிய பிறகே காலமும் இடமும் தோன்றியன.
No comments:
Post a Comment