Friday, July 2, 2010

36 : என் ஆவல் .

நமது தியானத்தில் தோன்றும் ஒளியை அகம் குளிர தரிசனம் செய்வதோடு மட்டுமன்றி, திடுமென அவ்வொளி பிரவாகத்திற்குள் குதித்து விடல் வேண்டும்.இப்போது நீங்கள் ஒளியில் கரைவதைக காணமுடியும். எந்த மிச்சமும் இல்லாமல் நீங்கள் கரைந்து , உங்கள் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் ஒளியாகி சுடர்வதை காணமுடியும். ஒரு இம்மிக்கூட குறைவில்லாது உங்கள் முழுமையும் ஒளியோடு இயைந்து விடும். உங்கள் உள் அமைப்பின் தகவமைப்பும், ஒளியின் உள்ளடக்கமாக மாறிவிடும். இப்போது ஒளியைதவிர எதுவுமேயில்லை. நீங்களும் (உங்கள் மனம் ) இல்லை. -மனம் என்பது ஒளியோடு இருள் விளையாடும் நிழல் விளையாட்டு . நிழலிருட்டு விளையாட்டு மட்டுமே மனம். நிழலும் இருட்டும் விளையாடுகிற நிழல்கள்தான் தான் இங்கிருக்கும் எல்லாமே!- ஒளியின் கதிக்கு உங்களை ஒப்படைத்து விட்டீர்கள். இப்படி ஒரு பத்து நிமிடம் நித்தம், நித்தம் ஒரு நாற்பத்தைந்து நாள் தொடந்து நீங்கள் ஒளியில் திளைத்தால், நீங்களும் இது மாதிரி ஒரு பிளாக் போட்டு, நீங்கள் அறிந்த உண்மை விளக்கத்தை அனைவருக்கும் சொல்வீர்கள். இப்படி அனைவரும் அறிந்துணர்ந்து சொல்லவேண்டும் என்பதும் என் ஆவல்.

No comments:

Post a Comment