Friday, July 9, 2010

40:சும்மா இருப்பது.

மனித குரோமோசோம் ஒன்றை மட்டும் பிரித்து அதன் D N A - வை நீட்டி விரித்தால் அது 5 சென்டி மீட்டர் நீளமிருக்கும். 46 குரோமோசோம்களையும்( நமது உடலிலுள்ள ஒரு ஜீனுக்குள் உள்ள கருவில் உள்ள மூலப்பொருள்) சேர்த்து பிரித்து இணைத்தால் 2 மீட்டர் நீளமிருக்கும்.( ஒரு ஜீனுக்குள் இருக்கும் 'கரு'வான மூலப்பொருள் D N A - வின் நீளம் 2 மீட்டர் ) மனித உடலிலுள்ள எல்லா செல்களிளிருந்தும் D N A - வையும் பிரித்து நீட்டினால் இங்கிருந்து சூரியனுக்கு 500 முறை போய் வரலாம். இயற்கை எத்தனை அற்புதமாக சிக்கனமாக அடுக்கி வைத்திருக்கிறது பாருங்கள் . அப்போ உங்கள் உடலில் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஜீனுமே தனித்தனி உயிரிதான். அவைகளுக்கு தனி உயிரும் தனி பண்பும், தனி எண்ணமும் உண்டு.

தினம் நீங்கள் காலையில் யோகா, தியானம் துவங்கும்பொழுது நீங்கள் பத்மாசனத்தில் அமரும்பொழுது , உங்களைப்போலவே உங்களுள் இருக்கும் கோடானு கோடி உயிரிகளையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்து அவைகளுக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக உங்கள் பயிற்சியை செய்து வாருங்கள்.
நீங்கள் அமர்ந்திருக்கிற மாதிரியே அவைகளையும் அமர சொல்லுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவைகளும் பின் பற்றி செய்யச்சொல்லுங்கள். நீங்கள் தினமும் தியானப்பயிற்சி செய்வது உங்களுக்காக அல்ல! உங்களுள் இருக்கும் உங்களின் கோடானு கோடி உயிரிகளையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டுவருவதற்காகவே.
இதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவைகள் தனித்தனி எண்ணம் கொண்டவையாக இருக்கின்றன . அவைகளை ஒரே வித தன்மைக்கு நீங்கள் எடுத்து வர வேண்டியுள்ளது. ( இதற்காகவே யோகா, தியானம் ) அவைகள் வெவ்வேறு எண்ணம் கொண்டவைகளாக இருப்பதால்தான் உங்களுக்கு அவ்வப்போது பல்வேறு எண்ணங்கள் தோன்றியவண்ணம் உள்ளது.
அவைகள் அனைத்தையுமே ஒரே நோக்கத்துக்கு திருப்ப வேண்டியுள்ளது. அவைகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு விஷயம் 'சும்மா' இருத்தலே!.நாமாக ஒரே 'எண்ணத்துக்குள்' கொண்டுவர முயற்சித்தால் சிறிது நேரத்தில் அவையவைகளும் தன போக்கிற்கு தனித்தனியாக எண்ண துவங்கிவிடுகிறது. ( அவைகளின் சுபாவம் அது. ஏனெனில் அவைகள் நீண்ட காலமாக அவைகள் அப்படிதான் - தனியாக - யோசித்து வந்திருக்கிறது.)
இப்போது நீங்கள் ஒரு ராணுவ அதிகாரியைப்போல நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவையனைத்தையும் ஒரே குணமுள்ளதாக மாற்ற வேண்டியுள்ளது. அவைகளுக்கு இரண்டு தான் பழக்கமாக உள்ளது. ஒன்று ஏதாவது யோசிப்பது. மற்றொன்று முடிந்தவரை சும்மா இருப்பது. அவகளுக்கு பழக்கமான ஒன்றான சும்மா இருப்பதையே அவை அனைத்தையும் ஒரே நடை முறைக்கு கொண்டுவர நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது.
நீங்கள் அவைகளுக்கு பயிற்சியளிக்குபொழுது ஒரே லயமாகாமல் - உங்களுக்கு இடை இடையே ஏதாவது எண்ணம் தோன்றினால், சில ஜீன்கள் இன்னும் உங்கள் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை என அர்த்தம். அவ்வளவே.
அப்படியில்லாமல் ஒரே லயமானால் - அனைத்துயிரும் சும்மா இருந்தால் - அப்போது நீங்கள் ( உங்கள் மனம் ) காணாது போயிருக்கும். ஏனெனில் அவையனைத்தும் ஒரே லயமாகி அறிய துவங்கிவிடும்.அங்கு ஒரு பூரணம் திகழும். முரண்பட்ட வேறுபாடுகள், பேதங்கள் விலகும்.

No comments:

Post a Comment