Sunday, July 4, 2010

37:யாவுயிரும் இன்பமுற!

இந்த சுந்தரம் ஒரு தனி உயிர் அல்ல. தனக்குள் இருக்கும் கோடிக்கணக்கான உயிரிகளின்( செல்களின் ) தொகுப்பு. சுந்தரம் தனக்குள் இருக்கும் இந்த கோடிக்கணக்கான உயிரிகளையும் மூடி காப்பாற்றும் ஒரு பாதுகாப்பு அமைப்பு. இந்த உள் உயிரிகளுக்கு உதவும் அனைத்து வித பொருட்களையும், இந்த உயிர்கள் ஏற்றுக்கொள்ளும். தீங்கு செய்யும் பொருட்களால் தான் மனிதனுக்கு வியாதி வருகிறது.( இந்த உயிரிகளே கண்ணாகவும், காதாகவும், மூக்காகவும், ரத்தமாகவும், எலும்பாகவும், தோலாகவும், இன்னபிற உறுப்புகளாகவும் இருக்கின்றன. அதன் ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வு தன்மையே இந்த உடல். மனம், அறிவு எல்லாம்.
நம்மோடு வாழும் மற்ற யாவுயிரையும் காப்பதே நம் கடமை. மனிதரைப்போலவே மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள் யாவுமே தனி உயிர் அல்ல. ஒவ்வொன்றுமே ஓர் உயிர்தொகுப்பு. தனக்குள் இருக்கும் உயிர் தொகுப்புகளை, எவ்விதம் இந்த மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் காப்பாற்றுகின்றனர் பாருங்கள், வேடிக்கைதான்.
இதுவே உயிர் பற்றிய அடிப்படை உண்மை. - தனக்கான இந்த உயிர் தொகுதியினை, மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள்பெறும் விதமே, அவரவர் கர்மா. இந்த கர்மா மனிதருக்கு மட்டுமல்ல மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள் அனைத்துக்குமே உண்டு.
கர்மா என்பது ஒரு உயிர் தொகுதி உருவாகும் பொழுது, அது மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் எதுவாயினும் தனது மூலமான தன் தாய், தந்தையிடமிருந்து உயிரைப்பெறும்போழுதே இந்த பாதுகாப்பு உணர்வான் தன்மையையும் பெற்றுக்கொள்கின்றன. அதனதன் பெற்றோரும் அப்படியே!. இந்த பாதுகாப்பு உணர்வே கர்மா.
இது மனிதருக்கு அறிவால் தெளிவாகும்போது இந்த பாதுகாப்பு தன்மையைத்தான் இதுவரை 'நான்; என்றும் 'எனது' என்றும் கருதி வந்திருக்கிறேன் என்பதை அறிகின்றனர். ஆனால் அதி அற்புதமான உண்மை என்னவெனில் இந்த உயிரிகள் எல்லாம் எக்கணமும் இன்புற்றிருக்கவே வந்திருக்கின்றன.
உங்களுடைய 'நான்' எனும் தன்முனைப்பு எப்போதெல்லாம் கவனம் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த உயிரிகள் குதூகலத்தில் இருந்திருக்கிறது. ( மனிதன் அதிக அளவுக்கு செக்ஸ் ஆசைப்படுவது இதனால் தான். அவன் செக்ஸ் ஈடுபாட்டில் இருக்குபொழுது அவனது தன்முனைப்பு தன்னை மறந்து கிடக்கிறது.}
அதன் ( செல்களின் ) தொடர்ந்த குதூகலத்தை தடுத்து வருவது உங்களுடைய 'நான்' எனும் தன்முனைப்பே! நீங்கள் சற்று நேரம் தியானத்தில் உங்களுடைய ' நானை' ( அதாவது உங்களுடைய 'நான்'என்பதான மனதின் செயல்பாட்டை ) நிறுத்தி வைத்ததால் அப்போது விளங்கும் உண்மை.
ஆகவே நண்பர்களே, சகோதரிகளே நீங்கள் காலையில் தியானம் செய்ய அமரும் பொழுது இவ்வுண்மையை கருத்தில் கொண்டு உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் யோகாவும், உங்கள் உடலில் மூளை முடுக்கிலுள்ள, பிராணனே சரியாக செல்லாத இருளில் கிடக்கிற உயிரிகளுக்கும் போய் சேருமளவுக்கு ஆழ்ந்த சுவாச பயிற்சியும் செய்து உங்கள் உள்ளிருக்கும் உயிரிகளுக்கு நன்மை செய்வீர்களாக! உங்களைப்போலவே வெளியில் உள்ள மற்ற உயிர் தொகுப்புகளுக்கும் நன்மை செய்வீராக!.

நன்றாக கவனியுங்கள் இந்த அடிப்படையிலேயே, ரமண மகரிஷியால் அவரது ஆசிரமத்தில் இருந்த பசு, மற்றும் சில உயிர்களுக்கு அவரால் மோட்சம் அளிக்கப்பட்டது.

2 comments:

 1. ஐயா வணக்கம்,

  என் வாழ்நாளில் தவறவிட்ட நல்ல சந்தர்பங்கள் பல அதில் ஒன்று இத்தனைநாள் தங்களின் வலைதளத்தை காணமல் இருந்தது. நேற்றும் இன்றும் தங்களின் வலைதளத்தை இடைவிடாமல் படித்துவருகிறேன். மிகவும் பயன் உள்ள பல அறிய கருத்துகள், செய்திகள், போதனைகள் நிறைந்து உள்ளன. என் மனதை தெளிவு படுத்த நல்ல தளமாக தங்களின் தளம் விளங்குகிறது. மிக்க நன்றி தொடர்ந்து எழுதுங்கள் இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்து உள்ளேன் ஜூலை மாதம் வரை முழுவதும் படித்து விட்டு விளக்கம் கேட்கிறேன்.
  நன்றியுடன்
  விஜய்.ச

  ReplyDelete
 2. ஐயா, உங்கள் கருத்துக்கு நன்றி. நானும் அப்படித்தான். இது எனக்குள் உதிக்க எனக்கு ஐம்பது நாலு வருடமாகிவிட்டது. அந்த உண்மை நமக்குள் வெளிப்பட நாம் இதுவரை அனுமதிக்கவேயில்லை. நிறைய விஷயங்களை உணர்வுக்கும், அறிவிற்கும் சேர்ச்சையாக இருக்கிறது என்று அதன் பின்னாடியே ஓடிவிட்டோம். உண்மையை சொன்னால் இன்னும்கூட மீளமுடியவில்லை.

  ReplyDelete