மூன்றுவித தன்மை நம்மில் செயல்படுகிறது. 1,( memory ) கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு கிடங்குகளில் பயணித்து , உங்களுக்கு ஏதுவானதை தீர்மானித்து , உங்களுக்கு எது பொருந்தும், எது பொருந்தாது என உங்கள் பழைய புராணங்களை, உங்கள் சரித்திரத்தை புரட்டிப்பார்த்து உங்களை இன்னும் இந்த பூமியில் தக்க வைத்திருப்பது , உங்கள் பூரண ஆயுளுக்கு வழி நடத்தும் 'மனம்' ஒன்று. ஓய்வும் கிடையாது.இது தன்னை சுயமென எண்ணிக்கொள்வது. இதற்கு உங்கள் ( இரண்டாவது தன்மையான ) உணர்வை மாற்றியமைக்கும் திறன் உண்டு.
2, ( live ) வாழ்வோடு மிக நேரடியாக தொடர்பு கொண்டு ( ரத்தமும் சதையுமாக ) சுக, துக்கங்களில் கலந்து வாழும் தேக உணர்வு மற்றொன்று.இது மிக உயிர்ப்பானது. இதற்கு இக்கணம் மட்டுமே. இந்த உணர்வில் நீங்கள் விழிப்புணர்வோடு நீடித்து லயிக்க முடிந்தால் ( உங்கள் மூன்றாவது தன்மையான அநுபூதி தன்மைக்கு வாசற்படியாக அமையும்.
3,( absolute ) இது பரிபூரண தன்மை வாய்ந்தது. காலம் எனும் கருத்தால் இது நிலையான காலம் என வருணிக்கலாம். அனைத்தும் இதனுள் அடக்கம். அதற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் இதிலிருந்தே தோன்றி மறைகிறது. முன் கூறிய மன எண்ணங்களையும், உடல் உணர்வையும் கடந்து இதில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. முன் கூறிய இரண்டையும் விட்டு விட்டாலே நீங்கள் இங்குதான் இருப்பீர்கள். நமது மூல இருப்பே இங்குதான். நமது மூல இருப்பு மட்டும் அல்ல இந்த பிரபஞ்சத்தின் மூல இருப்பும் இதுதான். இதற்கு எல்லையே இல்லை. இதில் நிலைக்கும் உங்களுக்கும் எல்லையே இருக்காது.
இதுதான் கிருஷ்ணா சொன்ன "எங்கும் நானே! எல்லாம் நானே!".
No comments:
Post a Comment