நாம் எல்லோரும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையை நுகர்வோன் யார்? சற்றும் தயங்காமல் " நான்தான் ' என்று சொல்லுகிறோம். உங்கள் வாழ்க்கையை நுகர்வது நீங்கள்தான். இன்னும் சற்று கூர்ந்து கவனமாக பாருங்கள். நுகர்வது உங்கள் மனமா?, உங்கள் உணர்வா? - உங்கள் எண்ணங்களா? உங்கள் உணர்வா?
இந்த வாழ்வை, வாழ்வின் விபரங்களை மனதால் அறியத்தான் முடியுமே தவிர நுகர முடியாது. ( அறிதல் என்பது நுகர்தல் ஆகாது ) ஆக! உணர்வுதான் இந்த வாழ்க்கையை நுகர்கிறது. அதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் இருக்காது.
இந்த உணர்வு சுயத்தன்மையுடையதா? அல்லது மனம் சுயத்தன்மையுடையதா?
மனம்தான் சுயத்தன்மையுடையது என்பது நமக்கு தெரியும். அது சுயமானதாக இருப்பதால்தான், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எண்ணுகிறோம்,மனதில் எழும் எண்ணம்தான் நமது நடத்தையை மாற்றுகிறது. ஒவ்வொரு விதமாக செயல்படுகிறோம். இது நமது சுயத்தை திருத்தி செய்ய.
ஆக! மனம் சுயமுடையது. இதைத்தான் 'நான்' என்று கூறுகிறோம். நான் என்பது மனதின் செயற்பாடு.
உணர்வுக்கு சுயத்தன்மை கிடையாது. ஏனெனில் அதற்கு நினைவுத்தன்மை ( மெமரி ) கிடையாது. நினைவுத்தன்மையற்ற ஒன்று சுயமாக இருக்க முடியுமா?
உணர்வுஎன்பது அவ்வப்போது ( கணத்துக்கு கணம் ) உணர்ந்து விடுதல் அவ்வளவே!
ஆமாம் இந்த உணர்வு இடத்தில்தான் உங்கள் வாழ்வே நுகரப்படுகிறது. இப்போது சொல்லுங்கள் இந்த வாழ்க்கையை நுகர்வது யார்? சுயமுள்ள மனமா? சுயமற்ற உணர்வா?
No comments:
Post a Comment