தன்னையறிதல் என்பது - தன்னை- இது என்ன? இது எப்படி செயல்படுகிறது? இந்த 'நான்' என்பது யார்? என்னை 'நான்' என்று எவ்விதம் அறிந்திருக்கிறேன்? இதன் வாழ்வுக்கு என்ன அர்த்தம்? இந்த 'நான்' எப்போது துவங்கியது? இது மாதிரி இன்னபிற கேள்விகளும் உங்களுக்கு உதித்தால்! - இந்த தன்னையறிதலைப்பற்றி கொஞ்சம் கவனிக்கலாம்.
நமது வாழ்வு அகப்பரிமாணம், புறப்பரிமாணம் என நமது கவனக்குறைவால் இருவித பரிணாமமுடையதாக பிரிந்து கிடக்கிறது. வாழ்வும் இப்போது அக வாழ்வு, புறவாழ்வு என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. நமது புற வாழ்வை நமது மனம் பராமரித்து வருகிறது. நமது அக வாழ்வை நமது உணர்வு பராமரித்து வருகிறது. புறவாழ்வை மனம் பராமரித்து வந்தாலும், அதன் சாராம்சத்தை நமது உணர்வே எடுத்துக்கொண்டு வாழ்கிறது. ஆக! புறவாழ்வின் பயனும் நமது அகவாழ்விலேயே உணரப்பட்டு, வாழ்வின் மகத்துவமே அகவாழ்விலேதான் அடங்கிக்கிடக்கிறது என்பது கண்கூடு.
ஆக! ஒரு மனிதன் தன்னையறிய விரும்பினால் தனது உணர்வுகளை அறிதல் வேண்டும். உடம்பு எனும் ஸ்தூல செயல்பாட்டினை நிறுத்தி, ஐம்புலன்களின் செயல்பாடுகளை நிறுத்தி, மனதின் காட்சி பிம்பங்கள், மனதின் மொழி பிம்பங்களையும் , { மனதையே ) நிறுத்தி- படர்ந்து விரிந்து முரண்பட்டு அலையும் உணர்வையும் ஒரு பூஜ்யத்துக்கு கொண்டுவந்து,
உணர்வை ஒரு புள்ளியில் நிறுத்த
( எல்லா விருத்திகளும் அடங்கி ) உணர்வு ஒரே ஏக உணர்வாக மலரும். அந்த ஏக உணர்வு பூரணமானதாக இருக்கும். எங்கும் நீக்கமற நிறைந்த பூர்ணம் அது.- 'தான்' -என்பதுவும் அதுவே! தன்னையரிதலும் இப்படியே!
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/09/blog-post_13.html
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-