Monday, January 31, 2011

விழிப்புணர்வு என்பது பற்றிய ஒரு தகவல்.

ஒரு உயிர்ப்புள்ள பூவின் மணம்போல இக்கணம் நேரடியாக திகழ்கிறது. அதை, அந்த உயிர்ப்பை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் உணர்வின் மூலம் மட்டுமே அனுபவிக்க முடியும். “

நிகழ்காலம் இக்கணம், இக்கணம் இப்பொழுது நடப்பது. இது நமது உணர்வில் நடப்பது. இது உயிர்ப்பானது. உயிரோட்டமிக்கது. இக்கணத்தை உணர்வாலேயே உணர முடியும்.” என நாம் கவனித்தோம்.

உணர்வின் ஆழத்துக்கு நாம் போகும்பொழுது இக்கணம் மட்டுமே மிஞ்சி இருப்பதை காண்போம்.

இங்கு மனம் செயலற்று, ஒரு சாட்சித்தன்மையோடு மட்டுமே செயல்படும். மனம் செயல்பட, கால அவகாசம் தேவை. இக்கணம் எனும் குறுகலான கால இடைவெளியில் மனம் செயல்பட முடியாது. இவ்விடைவெளியில் உணர்வு மட்டுமே தன முழு பூரண தன்மையுடன் செயல்படும்.

மனம் – கடந்த, இறந்தகால நினைவுகளில் மட்டுமே ஈடுபட முடியும். அது உயிர்ப்புள்ள இக்கண நிகழ்வில் நேராக பங்கு ஏற்க முடியாது. மனதிடம் ஓர்மை கிடையாது. அது பல்நோக்குடையது. சந்தேகிப்பது. அதுஆராயும் தன்மையுடையது.

உணர்வால் மட்டுமே நேரடித்தொடர்பு கொள்ளமுடியும். அது ஒர்மையுணர்வு உள்ளது. அதற்கு பல்நோக்கு கிடையாது. அதற்கு எதையும் ஆராயும் விருப்பம் கிடையாது. சந்தேகம் கிடையாது. மிக நெருக்கமான நேரடியானது.

இதையே 'விழிப்புணர்வு' என சொல்லப்படுகிறது.

விழிப்புணர்வு என்பது உணர்வால் மட்டும் இக்கணத்தை, இருப்பை நுகர்வது. இக்கண உணர்வையே முன்னோர்கள் 'விழிப்புணர்வு' என சொல்லியிருக்கிறார்கள்.

உங்கள் உணர்வால் இக்கணத்தில் இருங்கள்.

இப்போது இருப்புணர்வைத்தவிர வேறெதுவும் இருக்காது. அ

துவே விழிப்புணர்வு.

அந்த விழிப்புணர்வே அநுபூதி நிலைக்கு வாசல்.

No comments:

Post a Comment