உணர்வுக்கு சுயம் இல்லை . சுயம் என்பது நினைவுத்தன்மை (memory)உள்ளதற்கு மட்டுமே உண்டு. உணர்வு என்பது நிலையான ஓன்று அல்ல! அது தொடர்ந்து மாறி, மாறி நடப்பது. கணத்துக்கு கணம் மாறுவது.
ஒரு வலியுணர்ச்சி ஒரே மாதிரி இருப்பதில்லை. அந்த உணர்ச்சியில் பலவித மாற்றங்கள் உண்டு. கணத்துக்கு கணம் அது மாறுகிறது. அந்த பலவிதங்களை ஒன்றாக்கி ஒரே வலியாக உங்களை உணர வைப்பது உங்கள் அறிவாகிய உங்கள் மனம்தான்.
உணர்வு பின்னமானது. முழுமையானது அல்ல. அந்த பின்னங்களை கூட்டிக்கூட்டி முழுமையாக்குவது உங்கள் மனம்தான்.
தவிர, உணர்வுக்கு பேதமில்லை. உணர்வு பேதங்களை கற்பிப்பது உங்கள் மனமே!
அனால் உணர்வே உங்கள் வாழ்வோடு நேரிடை தொடர்ப்பு உள்ளது.
அதற்கு நேரிடையாக இருப்பதை உணர மட்டுமே தெரியும்.
மிக முக்கியமான விஷயம் : உணர்வுக்கு நேற்று, இன்று, நாளை எனும் மூன்று காலங்கள் இல்லை.
இருப்பது இந்த கணம் மட்டுமே!.
No comments:
Post a Comment