Thursday, January 20, 2011

பெற வேண்டியது எதுவுமில்லை. விட வேண்டியது அறியாமை மட்டுமே!.

நாம் மூன்று வித தன்மையில் இருக்கிறோம். ஒன்று :எண்ணங்களாகிய மனம். . இரண்டு: அனுபவித்தலான உணர்வு. மூன்று : அனைத்தையும் உள்ளடக்கிய( முற்றுணர்வு,முற்றறிவான ) பூரண நிலை.
இம்மூன்றும் ஒன்றாக இப்போது சேர்ந்து இயங்குகிறது. சராசரியாக இப்படித்தான் அனைவரும் இருக்கிறோம். இந்த மூன்றையும் பகுத்து அறிய, உணர நம்மால் முடிந்தால் நாம் நம்மை அறிந்தவராவோம்.

இந்த மூன்றும் கூட ஒரு அணுவைபபோன்று முத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

அணுவில் உள்ள எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மூன்றும் தனிதனித்தன்மையதாக இருக்க காண்கிறோம்.
எதிர்மின்-எலெக்ட்ரான், நேர்மின்-புரோட்டான், நிலைமின்-நியூட்ரான்.மின்னோட்டத்தின் மூன்று வித தன்மைகளாக இவைகள் இருக்கின்றது.

இவைகளும் முறையே நம்மில் எதிர்மின்-எலெக்ட்ரான்( வெளிநோக்கிய ) மனமாகவும்,, நேர்மின்-புரோட்டான்( தன்னையே நோக்கிய- தன் ) உணர்வாகவும், நிலைமின்-நியூட்ரான் (ஏக அறிவாகவும், ஏக உணர்வாகவும் ஒருங்கிணைந்து - முழுமையானதாக, பூரணமானதாக - ) பரிபூர்ண நிலையாக இருக்க காண்கிறோம்.

இதில் இரண்டு நிலைகள் அறியாமையை கொண்டுள்ளன. ஒன்று:மனம், மற்ற ஒன்று உணர்வு, ( அறியாமையான இரண்டும் ,ஓர் 'முழுமை'யாக(complete ) இல்லாது முழுமையின் 'பகுதிகளாக' இருப்பதால் தான் அறியாமையில் இருக்கின்றது.முழுமையடையாதது அறியாமை. முழுமையானது அறிவு. )

( குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் தளும்பாது.)

இவைகளே முறையாக 'நான்'எனும் மனம், தான் எனும் உணர்வு. இவை இரண்டுமே!

இந்த மனம் எனும் அறியாமையும், உணர்வு எனும் அறியாமையும் நம்மை விட்டு நீங்கினால்!( நான், எனது எனும் அறியாமையை விட்டு நீங்கினால் )நாம் அந்த பரிபூர்ண நிலையை காண்போம்.

ஒரு அணுவினில் என்ன நிகழ்கிறதோ ! அதுவேதான் நம்மிலும் நிகழ்கிறது.

ஆக! நாம் தியானத்தின் மூலம், யோகாவின் மூலம் , அல்லது குருவின் மூலம் - வெளியிலிருந்து - நாம் 'பெற'வேண்டியது எதுவுமில்லை. நாம்- நம்மிடமிருந்து - 'விட' வேண்டியது, நம் அறியாமையை மட்டுமே. அறியாமையை விட்டாலே! பரிபூர்ண நிலை வாய்க்கும்.
நமக்கு வெளியிலிருந்து பெறவேண்டியது எதுவுமில்லை, விடவேண்டியது மட்டுமே நம்மிடம் இருக்கிறது.

ஓம் பூர்ணமத; பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவ சிஷ்யதே.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

No comments:

Post a Comment