நமக்கு காலம் பற்றிய மூன்றுவிதமான கருத்துக்கள் உள்ளன. அவை முறையே
1, கடந்த காலம்,
2, நிகழ்காலம்,
3, நிலையான காலம்.
நாம் இதுவரை அறிந்திருப்பது இரண்டு மட்டுமே. ஆமாம் இந்த மூன்றாவதான நிலையான காலம் பற்றி நமக்கு அவ்வளவாக புரிதல் இல்லை. நாம் இன்னும் அங்கு பிரவேசிக்க்கவுமில்லை.
முதலாவதான கடந்தகாலம் நமது மனதில் நடக்கிறது. அவை இறந்த காலங்களின் நினைவுகள். ( மெமரி ) இவற்றை நமது மூளை செயல்படுத்துகிறது. கடந்த நொடிக்கூட இறந்த காலம்தான்.
இரண்டாவதான நிகழ்காலம் இக்கணம், இக்கணம் இப்பொழுது நடப்பது. இது நமது உணர்வில் நடப்பது. இது உயிர்ப்பானது. உயிரோட்டமிக்கது. இக்கணத்தை உணர்வாலேயே உணர முடியும். இக்கணத்தை, மனதாலாகிய அறிவு அதை தனது சோதனைக்கு உட்படுத்துவதற்க்குள் காலம் கடந்து விடுகிறது.நிகழ கணம் இறந்த கணமாகிவிடுகிறது.
அறிவு எதையும் சோதித்த பின்னரே ஏற்றுக்கொள்ளும்.
உணர்வு நேரடியானது.
மனம் சரிபார்த்த பின்பே ஏற்றுக்கொள்வது. மனதிற்கு சேமிப்பு உண்டு.
உணர்வுக்கு சேமிப்பு இல்லை.
உங்களுடைய 'நான்' கடந்த கால, இறந்த கால சவமாகி நாறிப்போன போன அந்த குப்பைகளின் சேமிப்பு கிடங்கிலேயே கால் ஊன்றி நிற்கிறது. உங்களுடைய 'நான்' தூக்கியெறியப்பட்ட குப்பைகளின் மீது அமர்ந்து அங்கு அழுகி, நாறிக்கிடக்கும் பொருட்களை அசைப்போட்டு உயிர்வாழும் நரி.
ஒரு உயிர்ப்புள்ள பூவின் மணம்போல இக்கணம் திகழ்கிறது.
அதை, அந்த உயிர்ப்பை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் உணர்வின் மூலமே அனுபவிக்க முடியும்.
மனதால் அதை அணுகக்கூட முடியாது.
No comments:
Post a Comment