மனம் உங்கள் உடலிலுள்ள ஒரு பகுதியான மூளையில் இருந்து மட்டுமே செயல்புரிகிறது. ஆனால், உணர்வோ உங்கள் உடல் முழுவதும் நின்று செயல்புரிகிறது.
மனம் உங்களின் ஒரு பகுதி. ஆனால் உணர்வோ உங்களின் முழுமை.
மனம் உங்கள் உடல் முழுவதிலுமுள்ள உணர்வோடு தொடர்பு வைத்திருக்கிறது. உங்கள் உணர்வை மனத்தால்( எப்படி வேண்டுமானாலும் ) நிர்வகிக்க முடியும்.
மனம் அதன் கட்டுப்பாட்டில், உங்கள் உணர்வை வைத்திருக்கிறது .
ஆனால் மனமோ நான் எனும் ஒரு 'மாயை'யில் சிக்கி இருக்கிறது. அதற்கு இந்த 'நான்' எனும் 'மாய சொரூபம்'ஏற்பட்டிருக்கிறது.
மனம் ‘சுயமாக’ தன கற்பனையில் ஒரு செயலை நிகழ்த்தி பார்த்தால், அந்த செயலுக்குண்டான உணர்வு மாற்றங்கள் உங்கள் உடலில் நிகழ்வதை உங்களால் காண முடியும்.
உங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. அதற்கு சுயமில்லை. அதற்கு எதுவும் தெரியாது. அது எடுப்பார் கைப்பிள்ளை.
ஆனால், அதுதான் நீங்கள். ஆமாம் இந்த வாழ்க்கையை நுகர்வது உங்கள் உணர்வுதான்.
மனமல்ல!
உணர்வுதான் நீங்கள்.
:)
ReplyDelete