Friday, October 8, 2010

தொகுப்புணர்வு.

நமது தியானத்தின் போது ஐம்புல உணர்வு,அறிவு ஓட்டத்தையும் , மனதின் அலைச்சலையும் படிப்படியாக குறைத்து அவைகளை முழுமையாக ஒடுங்க வைக்க ஒரு யோசனை.

அறிவு 'ஒளியால்' உண்டானது. மனம் ஒரு பூரண ஒளியை தரிசித்தால் தன் கிலேசம் மறந்து அது பூரண தெளிவை அடையும். அந்த பூரண ஒளி நமது புருவ மத்தியில் தோன்றுவதாகும். இந்த ஒளியை தோற்றுவிக்க நாம் நமது சுவாசத்தை சரியாக்க வேண்டும்.

நல்ல மூச்சு வாங்குகிற அளவுக்கு ஒரு உடல் பயிற்சிக்குப்பின் உடல் ஓய்வுக்காக ஒரு சீரான சுவாச ஓட்டம் அங்கு நிகழும். அப்போது செய்யப்படும் தியானத்தில் நமது கண்ணின் கரு விழிகளை அசையாமல் மேல் நோக்கி செருகி வைத்துக்கொள்ளல் வேண்டும்.

நம்மைப்பொருத்தவரை இப்போது அந்த கண்களில் எந்த வித ஸ்மரனையும் கிடையாது. ஒரு இறந்து போன மனிதனின் சவத்தில் உள்ள கண்ணைப்போல அது செயலற்று கிடக்க வேண்டும். இந்த கண்கள் இரண்டையும் இப்படி வைக்க காரணம், நமது ஐம்புலன்களின் செயல்களையும் செயல்படாது நிறுத்தி வைக்கும் சக்தி அதனிடம் உண்டு.

கருவிழிகளின் ஒரு சிறு அசைவுக்கூட மனத்தை எழுப்பி ஓட விட்டுவிடும்.

இப்போது மூச்சு சீராகி, சீராகி உங்கள் சுவாசத்தை உங்கள் வலது நாசியும், உங்களது இடது நாசியும் சந்திக்கும் இடத்தில் ( புருவ மத்தியில் ) இடது நாசிக்காற்றும், வலது நாசிக்கற்றும் சந்திக்கும் அதே இடத்தில் சலனமற்று மிகச்சிறு அசைவாக மட்டும் நிறுத்தினால் அங்கு நிலவும் பிராணன் ஒளியாக பிரகாசிக்கும். இதுவே பூரண ஒளி.

அந்த ஒளியை உங்கள் அறிவால் அல்ல, உங்கள் உணர்வால் மட்டும் அதை உணர முற்படுங்கள்.

உங்கள் உணர்வு என்பதே உங்கள் உடலிலுள்ள அனைத்து ஜீன்கள் உணரும் உணர்ச்சியாகும்.
உணர்வை அவைகளே உணருகின்றன. உங்கள் உடலிலுள்ள ஜீன்களின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? எத்தனை வித செல்கள் இருக்கின்றன தெரியுமா?



(1, How many cells are in the human body?

Sources give figures that vary from 50 to 75 trillion cells.

2, How many different types of cells are there in human body?

There are about 210 types of human cells.)

( மேற்கத்திய எண்முறையில் டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியனைக் (1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும். ஒரு டிரில்லியன், 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 12 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 1012 என எழுதப்படும்.)


( உங்களை ஒரு தனியனாக அறிவது உங்கள் மனம், ஆனால் நீங்கள் தொகுப்பாக இருப்பதே உண்மை )

உங்கள் உணர்வையே நீங்கள் ஒரு தனியனாக உணர்ந்தால் அங்கு மனமே அதை அறிகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

உங்கள் உணர்வை நீங்கள் தொகுப்பாக உணர்வதே உண்மையுணர்வு.

அனைத்து ஜீன்களையும் தட்டி எழுப்பி புருவ மத்தியை நோக்கி ( மேல்நோக்கி ) அந்த புருவ மத்தியில் சுடரும் ஜோதியை உணருங்கள்.

உங்கள் உணர்வு தொகுப்பால் ( ஒரு உணர்வு அல்ல ) 'ஏக உணர்வாக' அந்த பூரண ஒளியை உணர உங்கள் ஜீன்கள் அனைத்தும் சூரியனைக்கண்ட சூரிய காந்தி மலர்களைப்போல மலர்ந்து அந்த சூரியனோடு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

நீங்கள் ஒரு தனி மலரல்ல! மலர் தோட்டம். அங்கு உங்கள் மலர்களுக்கும் அந்த சூரியனுக்கும் இடையில் வேறு எதுவுமேயில்லை.

ஒரு தனியனை பொதுவாக பிரிப்பதே ஆன்மீக சாதனை என்பதையும் அறியுங்கள்.

தனியனாக அறிவது மனம். ஏகமாக,முற்றுணர்வாக உணர்வது தொகுப்புணர்வு.

2 comments:

  1. I am reading your blog..for long time and kind of silent reader.I have few basic questions how should I contact you Sundran Sir.....

    Anbudan
    Ravi

    ReplyDelete
  2. my email id sundaran51@gmail.com please contact.

    ReplyDelete