நம்முடைய இந்த உடம்பு இன்று இப்படி இருப்பதற்கு காரணம், நமது பரம்பரை பரம்பரையான சிந்தனை அமைப்பும், பழக்க வழக்கங்களுமே. நமது இந்த உடல் ஒரு உயிருள்ள கருவி.(Bio instrument) உங்களுக்கு இதன் தொழில் நுட்பம் தெரிந்தால், இதன் தன்மையை எளிதில் மாற்றி வைக்க முடியும்.
இதன் தொழில்நுட்பம் மிக எளிமையானது. உடலை எப்படி பழக்கப்படுத்துகிறீர்களோ அப்படியே பழக்கமாகி மாறிவிடும். உடம்புக்கு எந்தவித தனி நோக்கும் கிடையாது. அது ஒரு உயிர்ப்புள்ள கருவி அவ்வளவே!. இதை பழக்கத்தால் மட்டுமே மாற்ற முடியும். நீங்கள் காலையில் ஆறு மணிக்கு எழும் பழக்கமுள்ளவரா? தொடர்ந்து ஒரு பதினைந்து நாட்கள் சரியாக அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து பழகுங்கள் பின் நீங்கள் கஷ்டப்படவே வேண்டியதில்லை, சரியாக மூன்று மணிக்கு நீங்களாகவே அனிச்சை செயலாக எழுந்து விடுவீர்கள்.
உங்கள் உடலில் செல்கள் புதிது புதிதாக உருவாகிகொண்டேயிருக்கிறது. நீங்கள் எப்படி பழக்கப்படுத்துகிறீர்களோ அப்படியே அது பழகிக்கொள்ளும்.
நீங்கள் நித்தமும் ஒரு குறிப்பிட்ட சரியான நேரத்தில் தியானம் செய்துவர , நீங்கள் உங்களை பொருட்களாலான உருவமாகவோ, அல்லது அலைகளாலான ஒளியாகவோ உங்களை உருவகித்து வந்தால் உங்கள் உடல் அதற்கு பழக்கப்பட்டுவிடும்.
உங்களை நீங்கள் எல்லையுடைய உருவமாகவும் பாவிக்கலாம், அல்லது எல்லைகளற்ற ஒளியாகவும் பாவிக்கலாம். இந்த ஒளி நிலையை தொடர்ந்து பழக்கப்படுத்தி தனது தேகத்தையே ஒளியலையாக மாற்றி தேகத்தையே ஒளியலையாக மாற்றி ஒளியோடு ஒளியாக இணைத்து காட்டியவர் அருட்பெரும் வள்ளலார் அவர்கள்.
nice one
ReplyDelete//இந்த ஒளி நிலையை தொடர்ந்து பழக்கப்படுத்தி தனது தேகத்தையே ஒளியலையாக மாற்றி தேகத்தையே ஒளியலையாக மாற்றி ஒளியோடு ஒளியாக இணைத்து காட்டியவர் அருட்பெரும் வள்ளலார் அவர்கள்.//
ReplyDeleteI agree with U :)