Wednesday, October 6, 2010

அறிவு, உணர்வு, சாட்சித்தன்மை.

மனிதன் எத்தகையவன் என நாம் ஆராய்ந்து பார்த்ததால், மனிதன் மூன்று வகை தன்மையுடையவனாக இருப்பது தெரிய வருகிறது. ஓன்று : மனம், இரண்டு : உணர்வு , மூன்று : சாட்சித்தன்மை. இப்போது மனம் செயல்படும் விதம் பற்றி பார்ப்போம். மனிதன் மனதைக்கொண்டு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். அறிவாலே தனக்கு வெளியில், தன்னை சுற்றியும் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். தனக்குள் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். அறிவாலே புதிதாக யோசிக்கவும் செய்கிறான். அறிவாலே கற்பனை செய்யவும் செய்கிறான். மனதாலே நல்லது எது, கேட்டது எது எனவும் கண்டு கொள்கிறான்.முடிவும் எடுக்கிறான். கூர்ந்த மனதைக்கொண்டு மற்றவர்கள் அறியாத ஒன்றைக்கூட இவன் அறிந்த சொல்கிறான். தனது நுட்பமான மனதாலேஎல்லாவித கலைகளிலும் பரிணமிக்கிறான். நுண்ணறிவால் தொடர்ந்து ஒன்றையே ஆராய்ந்து விஞ்ஞானியாகிறான். மனம் தான் இவனுக்கு வாழ்க்கையை அமைத்து தருகிறது. இவன் எந்த வழியில் செல்லவேண்டுமென சொல்கிறது.இதனுடைய சிறப்புத்தன்மை என்னவெனில் இதன் நினைவகத்தன்மை. தன்னை பாதித்த விஷயங்களை தனது நினைவில் வைத்துக்கொள்கிறது. தனக்கு எது நல்லது அல்லது எது கேட்டது என அது ஆராயும்பொழுது அது தனது நினைவாக தொகுப்பிலிருந்தே விஷயங்களை எடுத்து அலசி ஆராய்கிறது. இது எப்போதும் எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலையிலேயே இருக்கிறது. இந்த உயிரைப்பாதுகாப்பதில் எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்கிறது. எதையுமே தன்னை சார்ந்தே நல்லதுகெட்டது என முடிவு எடுக்கிறது. ( தன்னலத்தையே குறிக்கோளாக கொண்டு செயல் புரிகிறது.) இது அனைத்தையும் அறிந்து கொள்ளும் அறிவாகவே இருக்கிறது.

அடுத்து உணர்வைப்பற்றி கவனிப்போம் . உணர்வு எப்போதும் நம் உடலை சார்ந்தே இருப்பது அறியவருகிறது. தனது உடலுக்கு வெளியில் நடக்கும் விஷயங்களை அது உணர்வதாக தெரியவில்லை. தவிர அறிவைப்போல நினைவகத்தன்மையோ, வெவ்வேறான உணர்வுகளை சேமித்து வைத்தாலோ இதனிடம் இல்லை. இது இப்போது இக்கணத்தில் மட்டுமே உணரப்படுவது.

உணர்வுக்கு இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலம் கிடையாது .

உணர்வுக்கு இக்கணம், இக்கணம், இக்கணம் மட்டுமே. எந்த உணர்வாக இருந்தாலும் இதனால் ஒரு கண நேரம் மட்டுமே உணர முடியும். தவிர உணர்வுக்கு பேதம் தெரியாது. உணர்வில் பேதத்தை அறிவதெல்லாம் அறிவுதான். உனது உடலில் இப்போது நடக்கும் உணர்வை உனது மனதால் நீ அறியாமல் இருந்தால் - உன் உணர்வுக்கு அது 'எப்போதும் உணர்கிற மாதிரி இப்போதும் இது ஒரு உணர்வு' என்கிறதாகவே இருக்கும்.

உணர்வான 'தனக்கு' உணர்வு பேதமில்லை, என்பதையும் உணர்வு உணர்வதில்லை. இந்த உணர்வு தளத்தை தனது மேடையாக்கி எல்லாவித பிரசங்கமும் செய்து கொள்வது உங்கள் மனமேதான். உங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. எல்லா கில்லாடிதனமும் உங்கள் மனதிடமே இருக்கிறது. சகோதர சகோதரிகளே இந்த நிலைமை உங்களுக்கு மட்டும்தான் என்றில்லை. அனைத்து உயிர்களின் நிலைமையும் இதுதான்.

மூன்றாவதான பேதமற்ற அந்த சாட்சித்தன்மையை பார்ப்போம். இந்த சாட்சித்தன்மைதான் இந்து மதம் சொன்ன பிரம்மம் , புத்தபிரான் சொன்ன சூன்யம், முகமது சொன்ன அல்லா,ஆதிசங்கரர் சொன்ன அத்வைதம்.

இனி,இவர்களைப்போல உங்கள் கண்டுபிடிப்பை நீங்கள் உலகுக்கு சொல்லுங்கள். இந்த சாட்சித்தன்மையே உங்களிலும் இருக்கிறது, அனைத்துயிரிலும் இருக்கிறது, எல்லாமுமாக இருப்பதுவும் இந்த சாட்சித்தன்மையே!

உங்களுடைய அறிவுக்கு அது சாட்சித்தன்மை. மற்றபடி அது 'பூரணம்'.

சரி இந்த மூவித தன்மை நமக்கு வாய்த்த காரணமென்ன? நுண்ணுணர்வால் ஆராய்ந்தோமானால் தெரியவரும். அணுவின் முக்குணம் நிலைமின் ஆற்றல், நேர்மின் ஆற்றல், எதிர் மின் ஆற்றல் என. நமது உயிரிலும், உடலிலும் இவைகள் செயல்படும் விதமே இந்த மூவித ஆற்றல்கல்தான்.

நிலை மின் ஆற்றல் நமது சாட்சித்தன்மை.

நேர்மின் ஆற்றல் நமது உணர்வு நிலை.

எதிர்மின் ஆற்றல் நமது அறிவு நிலை.


அணுக்கள் துகள்களால் ஆனது.

எலெக்ட்ரான் துகள் : எதிர் மின்னூட்டம் கொண்டவை.
புரோட்டான் துகள் : நேர் மின்னூட்டம் கொண்டவை.
நியூட்ரான் துகள் : மின் சுமை அற்றவை. ( நிலை மின் )

மின் புலத்தாலும், காந்தப்புலத்தாலும் பாதிப்படையும் துகள்கள்,
எலெக்ட்ரான் துகள்கள்.(பீட்டா துகள்கள்-கதிர் )
புரோட்டான் துகள்கள்.( ஆல்பா துகள்-கதிர் )

மின் புலத்தாலும், காந்தப்புலத்தாலும் பாதிப்படையாத துகள்கள்( காமா துகள்கள்-கதிர்) நியூட்ரான் துகள்.


ஒரு அணுவின் 'தன்னுணர்வும்' இத்தகையதாகவே இருக்கும். நிலை மின்னை சார்ந்தே நேர்மின் இருக்கிறது. நேர் மின்னை தொடர்பு கொண்டே எதிர்மின் இயங்குகிறது. ஒரு அணுவின் அடிப்படை தன்மை எதுவோ அதுவே மனித உயிரின் தன்மையுமாகும்.

நமது அறிவு வெளியுலகையும் காண்கிறது தொடர்பு கொள்கிறது. ஆனால் அதேசமயம் நமது உணர்வை விட்டு விலகுவது கிடையாது. அறிவும் உணர்வும் இணைந்தே செயல் புரிகிறது. உணர்வு சமநிலைக்காக அறிவு கனவு காண்கிறது. உணர்வு சாட்சித்தன்மையை சார்ந்தும் அதே சமயம் அறிவோடு தொடர்பு கொண்டும் இருக்கிறது. அறிவு காட்சித்தன்மையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. ஒளி, நிழல், இருள் எனும் தெளிவு, குழப்பம், மடமை இந்த மூன்றுக்குள் எல்லாவித காட்சிகளும் அடங்கிவிடுகிறது. உணர்வு சப்த தன்மையுடம் நெருங்கிய தொடர்புடன் இருக்கிறது. சாந்தம், பதற்றம், தவிப்பு என இது இருக்கிறது.

No comments:

Post a Comment