நான் என்பது ஒரு கருத்துரு மட்டுமே. அது ஒரு அபிப்ராயம். அது ஒரு அறியாமை. அது மனதினில் நடக்கும் ‘பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு செயல்பாடு’ மட்டுமே!
மற்றும் நான் என்பது 'ஒரு' உயிர் மட்டுமே அல்ல! நமக்குள் எழுபது லட்சம் கோடி 'தனி' உயிர்கள் இருக்கிறது. அவைகளை ஜீன் என்று அழைக்கிறோம். நான் என்பது ஓர் உயிர் தொகுப்பு. மனம் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் ஒரு பொது அமைப்பு. அந்த எழுபது லட்சம் கோடி ஜீன்களும் அதுவது ஜீவிக்கும் இடத்தைப்பொறுத்து அதனதன் பிரச்னைகள் பலவாறு வேறு வேறாக இருக்கிறது. அதன் சிந்தனையும் தேவையும் வேறு வேறாக இருக்கிறது. இதனாலேயே உங்கள் மனம் சதா ஏதாவது ஒன்றில் சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜீனின் தவிப்பையும், உணர்வையும் உங்கள் மூளை வாசித்துக்கொண்டே இருக்கிறது.
நமது மனம் எவ்விதம் செயல்படுகிறது என்பதை கவனிப்போம். மனம் மூளையை கருவியாகக்கொண்டு செயல் புரிகிறது. அந்த மூளையோ உடலிலுள்ள ஜீன்களோடு மட்டும் ( ஜீன்களின் உணர்வுகளோடு ) நேரிடையான தொடர்பு கொண்டிருக்கிறது. இந்த ஜீன்களின் உணர்வுகள்தான் உங்கள் ஒட்டுமொத்த வாழ்வின் சாரமும் ஆகும். உங்கள் புகழ், உங்கள் கௌரவம் , உங்கள் அந்தஸ்து இன்னபிறவும் இந்த வெறும் உணர்வுமட்டுமேயாகும்.உங்கள் வாழ்வுக்கு அர்த்தம் இவ்வளவு மட்டுமே!
இதற்கு வெளியில் நடப்பதெல்லாம்( நீங்கள் எண்ணுவது ) வெறும் பொய் மட்டுமே! உங்கள் வாழ்க்கையோ கேவலம் இப்படி கையளவேயாகி சுருங்கி கிடக்கிறது. உங்கள் தேடலோ பல பிறவிகளாக அகண்டு விரிந்து எல்லைகளற்று கிடக்கிறது. எதை தேடி உங்கள் வாழ்வு பல பிறவிகளை தாண்டி வந்திருக்கிறது? இன்னும் திருப்தியுறாத ஒன்று என்ன? எது திருப்தியுராததால் பல பிறவிகள் கடந்து வந்தீர்கள்? இந்த கையகல உணர்வுதான்.
ஆமாம் இந்த கையகல உணர்வு திருப்தியுறாமல் தான் பல பிறவிகள் கடந்தீர்கள். இந்த பிறவி,மனித பிறவி 'இந்த அறிவை'அறியும் பிறவி.
No comments:
Post a Comment