Sunday, August 22, 2010

50:குறைவான வாழ்வும் நிறைவான வாழ்வும்.

பல பிறவிகள் தொடர்ந்தும் இன்னும் குறை தீரவில்லை நமக்கு. இப்போதும் நடைமுறை வாழ்விலும் தேடல் தொடர்கிறது. ஒரு உதாரணம். ஏன் நம்மை போன்ற சாமான்யரை கூட விடுங்கள். திருமதி சோனியா காந்தி போன்ற சர்வ அதிகாரம் கொண்ட நபர்களுக்கு கூட இன்னும் குறையை தீர்த்துக்கொள்ள முடியவில்லை. ( விஷயம் என்னவென்றால், நம்முடைய குறையை நாம் தவறாக அவதானிக்கிறோம் என்பதே )
எவ்வளவு பொருளாதாரம், எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் குறை தீர்வதில்லை.
இந்த வாழ்வு குறைவான வாழ்வுதான். நீங்கள் எவ்வளவு போராடினாலும் , எவ்வளவு உழைத்தாலும், ஏன் எவ்வளவுதான் பிறரை ஏமாற்றினாலும் இந்த குறை தீரப்போவதில்லை. இந்த வாழ்வு , நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்தாலும் இன்னும் எதையோ தேடிக்கொண்டுதான் இருக்க வைக்கிறது. உங்களுக்கு தேவைகள் இருக்கும்வரை அது குறைவான வாழ்வுதான்.

பல பிறவிகளாக தொடர்ந்து வரும் ( இன்னும் தீராத ) குறை எது?

இதை நாம் அறிய முயற்சிப்பதில்லை. இதை அறிய முயற்சித்து அறிந்தவர்கள் அவர்களின் குறையை தீர்த்து நிறைவான வாழ்வை வாழ்கிறார்கள். இந்த வாழ்வை குறைவாகவே வாழ்வதா? நிறைவாக வாழ்வதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment