Wednesday, April 27, 2011

சூன்யம்.

நீ அசைவற்று இருந்து, உலகத்திலிருந்து விடுபட்டு கடந்து, உருவத்திலிருந்து விடுபட்டு கடந்து,கருத்திலிருந்து விடுபட்டு கடந்து ஒலியிலிருந்து விடுபட்டு கடந்து , ஒளியிலிருந்து விடுபட்டு கடந்து,வெளியிலிருந்தும் விடுபட்டு கடந்து , நிர்மலமான எதுவுமற்ற சூன்யத்தை அடைவாயாக! அங்கு பொருள் இல்லை, அங்கு இடம் இல்லை, அங்கு வெளியில்லை, அங்கு இயக்கம் இல்லை, அங்கு காலம் இல்லை, அங்கு கருத்தும் இல்லை,அங்கு நீயும் இல்லை. அங்கு ஒரு இருப்பு மட்டு உள்ளது. அந்த இருப்பும் உனதல்ல! சூன்யத்தில் 'இருக்கிறாய்'. அந்த இருப்பு . இது உன் கருத்துக்கு காண கிடைக்காது. அது சூட்சுமம். இந்த பிரபஞ்சத்தின் இருப்பும் இங்கு தான் இருக்கிறது. அங்கு இருப்பது ஒரே இருப்புதான். இந்த இருப்பு புள்ளியற்ற புள்ளியில் ஒடுங்கியுள்ளது. இருப்பது போலும் இல்லாதது போலும் இருக்கிறது.
உலகத்திலிருந்து விடுபட்டது
உருவத்திலிருந்து விடுபட்டது
கருத்திலிருந்து விடுபட்டது
ஒலியிலிருந்து விடுபட்டது
ஒளியிலிருந்து விடுபட்டது
வெளியிலிருந்தும் விடுபட்டது எது தெரியுமா? அதுவே இருப்பு. அது உன்னுடைய அனைத்திலிருந்தும் விடுபட முடிந்தால்! அது உன்னுடையதா? இல்லையில்லை அதனுடையது தான் நீ. அது இங்கு, அங்கு என உள்ள அனைத்தின் ஆதாரமும் ஆகும்.

No comments:

Post a Comment