Sunday, March 21, 2010

10 : நமது இருப்பு நிலை.

நண்பர்களே, நீங்கள் இருக்கிறீர்களா? இருக்கிறோம் என்றால் அந்த இருப்பை எப்படி அறிகிறீர்கள்? கொஞ்சம் கண்மூடி யோசித்து பாருங்கள். பொதுவாக நம் இருப்பை நாம் நமது உடல் முழுவதும் உணர்வதாக நினைக்கிறோம். கொஞ்சம் ஆழமாக பாருங்கள். நாம் நமது இருப்பை நமது முதுகு தண்டுவடத்திலேதான் உணர்கிறோம். நமது ஐம்புல உணர்வை விடுத்து,{ஐம்புல உணர்வு உடல் முழுவதும் உள்ளதாக உணர்வது ) நம் தண்டுவட உணர்வுக்கு போனோமானால், நமது இருப்பு உணர்வு முழுவதும் இந்த தண்டுவடத்தில் உணரமுடியும். நமது ருசி, வலி, இன்னபிற உணர்வுகளையும் நாம் இங்கேதான் உணர்கிறோம் என்பதையும் கண்டுகொள்வீர்கள். த்யானத்தின்போது இதை தெளிவாக உணர முடியும். இன்னும் மிக ஆழ்ந்த த்யானத்தில் இந்த உணர்வு ஒரு புள்ளியில் ஓடுங்குவதையும் அறிய முடியும். நமக்கு இருக்கும் இருப்பு உணர்வைப்போலவே, இந்த பிரபஞ்சத்துக்கும் ஒரு இருப்பு உணர்வு இருக்கிறது. நமது இருப்பு உணர்வும் அந்த பிரபஞ்ச இருப்பு உணர்வும் ஒரு லயமாவதே ஞானமடைதல் என்பது. நமது இருப்புணர்வை தவிர, நம்மில் நிகழும் மற்றவை அனைத்தும் மாயை நிரந்தரமில்லாதது. அதே போல இப்பிரபஞ்சத்தின் இருப்புணர்வு மட்டுமே நிலையானது. நம் காட்சிக்கு புலனாகும் இந்த தோற்ற பிரபஞ்சமே ஒரு மாயை நிரந்தரமில்லாதது. . இருப்புணர்வு மட்டுமே நிலையானது.நிரந்தரமானது. ஆகவே நமது இருப்பு உணர்வை ஆழ்ந்து கவனிப்போம்.

No comments:

Post a Comment