Friday, March 12, 2010

5 : இறையும்-மாயாவும்.

இங்கு இருப்பது இரண்டு மட்டுமே! ஒன்று மாயா. மற்றது இறைநிலையறிவு.

மாயா எல்லா மாற்றங்களையும் உடையது.

இறைநிலையறிவோ நிலையானது. எந்தவித மாற்றமும் அடையாதது.

இறைநிலையோ இருப்பு உணர்வாகவும், சாட்சி தன்மையாகவும் நமக்கு விளங்க கூடியது.

வளமை, வறுமை- சுகம், வலி-இதுபோன்ற விஷயங்களை மாயா

தனது கட்டுப்பாட்டில், அதிகாரத்தில், ஆட்சியில் வைத்து இருக்கிறது.

(உங்களுக்கு பணம் வேண்டும், அதிகாரம் வேண்டும் இன்னும் இதுபோன்ற
தேவைகளுக்கு நீங்கள் மாயாவிடம் தான் போய் கேட்க வேண்டும்.
அதை உங்களுக்கு தருவதும், அல்லது அதை உங்களிடமிருந்து பறித்து கொள்வதும்
மாயாவின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கிறது. சர்வ நிச்சயமாக இந்த அதிகாரம்
இறையறிவிடம் இல்லை.இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.)

அந்த இறைநிலை அறிவிடம் நிம்மதி, பூர்ணதன்மை, உயிர்ப்பு மட்டுமே உள்ளது.

இறையிடம் போனால் இதுமட்டுமே கிடைக்கும்.

ஆனால், அந்த மாயா இறையறிவுக்கு கட்டுப்பட்டே இயங்குகிறது.

1 comment:

  1. ஐயா வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை வலைபூவில் தொடர்பு கொள்கிறேன். மாயா இறைநிலை அறிவுக்கு கட்டுப்பட்டது என்றால் ஏன் நல்ல மனம் உள்ளவர்களுக்கு வறுமையும் துன்பமும் நீங்காமல் இருக்கிறது. இறை நிலை என்பது சாட்சி மட்டும் என்று அறிந்தால் மக்கள் மனமுடைய மாட்டார்களா என்னையும் சேர்த்து எல்லோரும் இறைநம்பிக்கையை சார்ந்து வந்துள்ளோம். நடக்கும் அனைத்தும் மாவின் செயல் என்றால் ஏன் தீயவர்களுக்கு பலனும் நல்லவர்களுக்கு இளமையில் வறுமையும் முதுமையில் உழைப்பையும் கஷ்டத்தயும் தருகிறது, விளக்குங்கள் ஐயா. நன்றியுடன்
    விஜய்.ச

    ReplyDelete