Friday, March 19, 2010

6 : மனமும்-அலையும்.



ஒரு அளவுள்ள சிறு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் பரப்பில், நடுவில் தோன்றும் அலையானது அதன் எல்லையாகிய பத்திரத்தின் விளிம்பை அடைந்ததும், அது திரும்பி புறப்பட்ட இடத்தை நோக்கியே வருகிறது. ஒரு குளத்தின் நடுவில் தோன்றும் அலையானது அதன் விளிம்பான கரையை அடைந்ததும் அது திரும்பி புறப்பட்ட இடத்தை நோக்கியே வருகிறது.நீர் பரப்பின் நடுவிலிருந்து அலைகள் எழும்பி வெளி நோக்கி போவதும், ஏற்கனவே கரையிலிருந்து திரும்பி வரும் அலைகள் இந்த அலைகளை வெட்டி தடுப்பதுமான இந்த மாதிரி நிகழ்வே மனத்தில் நிகழும்போது எண்ணமாக அறியப்படுவது. இதுவே ஒரு எல்லைகளற்ற நீர் பரப்பில் நிகழுமானால், நீர்பரப்பின் மையத்திலிருந்து புறப்படும் அலைகளானது எந்த தடுப்பும் இல்லாது தொடர்ந்து எல்லைகளற்ற திசைகளில் ஓடுகிறது. அங்கு எந்த எண்ணமும் தோன்றுவதில்லை. உங்கள் மனதுக்கு நீங்கக் எந்த எல்லைகளையும் நிர்ணயம் செய்யாமல், மனதை எல்லையற்ற தன்மையில் வைத்திருந்தால், உங்கள் மனதும் எண்ணங்கள் அற்று நிர்மலமாக இருக்கும்.மனம் எல்லையுள்ளதாக இருக்குபோது எண்ணங்கள் தொடந்து தோன்றுகின்றன. மனம் எல்லைகளற்று இயங்கும்போது எண்ணங்கள் எதுவும் தோன்றுவதில்லை. அலையும் எதிரலையும் மோதிக்கொள்வது எண்ணம். எதிரலைகள் இல்லாது ஒரே அலைகளில் தோன்றுவது லயம். மனதை எல்லைகளற்று வைத்திருந்து கவனியுங்கள்.

No comments:

Post a Comment