Tuesday, April 26, 2011

மறைப்பொருள்

கருத்து,விழிப்புணர்வு,அருள்நிலை.

கருத்து என்பது காலத்தின் மூன்று வித தன்மையில்( கடந்த காலம், நிகழ காலம், எதிர் காலம் ) நடை பெறுவது.

விழிப்புணர்வு என்பது இக்கணம், இக்கணம் எனும் நிகழ காலத்தில் மட்டும் நடைபெறுவது.

அருள் நிலை என்பது நிலைக்காலம் எனும் அனைத்து ( மூன்று வித ) காலங்களையும் உள்ளடக்கிய கால நிலையில் நடை பெறுவது.

இதனாலேயே இதை சூட்சுமம் அல்லது மறைபொருள் என சொன்னார்கள்.

அதாவது கருத்துக்கு அது சூட்சுமமாக இருப்பதால்.

ஏதும் அற்ற வெட்ட வெளியை ஒரு பொருளை உதாரணம் காட்டி சொல்ல சொன்னால் முடியுமா? அதுபோல!
கருத்து என்பது உருவமானது. சூட்சுமம் என்பது அருவமானது.

கருத்து என்பது நமக்கு அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.

விழிப்புணர்வு என்பது மிக நுட்பமான உணர்வு பூர்வமான செயல்பாடு.

அருள்நிலை என்பது பொருள் நிலையின் இயக்கமற்ற ஓர் அனுபவநிலை.

கருத்தை அறியலாம்.
விழிப்புணர்வை உணர முடியும்.
அருள்நிலையை அனுபவிக்க மட்டுமே முடியும்.

No comments:

Post a Comment