Wednesday, June 16, 2010

20 : மனம் உருவான வரலாறு

இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களையும் போல நீங்களும் ஒரு பொருள்தான். ( இப்பிரபஞ்ச பொருள் ) எல்லா பொருட்களுக்கும் தொடர்ந்து வாழ விருப்பம் இருப்பது போல உங்களுக்கும் நீடித்து வாழ விருப்பம் உள்ளது. இது பிரபஞ்ச பொதுஇயல்பு .உங்களின் 'வாழவேண்டும்' எனும் விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். இந்த மனம் உருவான வரலாறு - தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தனக்கு பாதுகாப்பாக இருப்பது எது? என்பதைப்பற்றிய தகவல் தொகுப்பே 'மனம்' .( memory) மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்கள் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் , நினைவுகளும் உங்களின் 'பாதுகாப்பின்' அடிப்படையிலேயே நிகழ்கிறது. - என்பதை நாம் அறிய வேண்டும். நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது என அறிந்தால், ( வாழ வேண்டும் எனும் ஆசை மறைந்து விடும்போது ) உங்கள் மனம் ஓய்வெடுக்க விரும்புகிறதை அறிவீர்கள். வாழும் ஆசை இருக்கும்வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது மிகவும் கஷ்டம். நம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது.

Friday, June 11, 2010

19 : நிறைவான பூரண நிலை

நான் யார்? நான் என்பது இந்த உடலை, உயிரை பாதுகாப்புடன் வளர்த்திக்கொள்ளும் ஒரு தன்முனைப்பு மன இயக்கம்.( இந்த நான், மனிதர்க்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு, பறவைகளுக்கு, புழு, பூச்சிகளுக்கு,மரம், செடி, கொடிகளுக்கும் , நுண்ணுயிரிகளுக்கும் உள்ளது) சரி இந்த உடல், உயிர் இன்னும் சுமார் பத்து வருடத்திற்கு தாங்கும் என வைத்துக்கொள்வோம் அதுவரைக்கு உண்டான பாதுகாப்புக்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது.பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது. இனி 'இவன்' இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல! (இங்கு இவனாக செயல்படுவது பிரபஞ்ச சக்தியே).இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது. சரி, நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? மூன்று நிலைகளான 1, பிரபஞ்ச நிலை 2,நமது மன நிலை 3,மன நிலையை கடந்த 'நிறைவான' பூரண நிலை. இவற்றில் நாம் நம் தியானத்தின் மூலம் நிறைவான பூரண நிலையில் நின்று நிறைவான பூரணத்தில் (complete)லயிப்போம்.

Wednesday, June 9, 2010

18 : ஒரு நகைச்சுவை

எனக்கு இந்த ஜில்லா, இந்த தாலுக்கா, இந்த கிராமத்தில் 160/3சர்வே எண்ணின் படி 5 ஏக்கர் 42 சென்ட் நிலம் எனக்கு சொந்தமானது. அது என்னுடையது. இந்த உலகில் உள்ள எவரும் இந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அது என்னுடையது. என்னிடம் ஒரு பஜாஜ் கம்பெனி மோட்டார் சைக்கிள் உள்ளது. அதுவும் என் பெயரில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டு அதுவும் எனக்கு சொந்தமானது. நான் நான்கு பசு மாடு வளர்க்கிறேன் அவைகளும் எனக்கு மட்டுமே சொந்தம். நான் விரும்பினால் அதற்கு தீனி போடலாம், அதன் தாகத்துக்கு தண்ணீர் வைக்கலாம் , விருப்பமில்லாவிட்டால் அவைகளை அப்படியே கவனிக்காமல், பட்டினி போட்டு 'கொல்ல' முடியும். அது என் உரிமை. போன வாரம் இரண்டாயிரம் கொடுத்து சந்தையில் இரண்டு வெண்ணிற ஆட்டுக்குட்டி வாங்கினேன். அதுவும் எனக்கு சொந்தம். நான் விரும்பினால் அதனுடைய ஒரு காதை மட்டும் அறுத்து , நெருப்பில் சுட்டு தின்னலாம். எவனும் கேட்க முடியாது.ஏன் அதை கொன்று கறி சமைத்து உண்ணலாம். (உலகில் உள்ள எல்லா ஆடுகளுமே இதற்குதான் கொல்லப்படுகிறது) அல்லது அந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் கட்டப்பட்டிருக்கிற கயிற்றை தரித்து விட்டு , எங்கோ போய் பிழைத்துக்கொள்ளுங்கள் என சுதந்திரமாக திரியவிடலாம். எனக்கு சொந்தமாக மனைவி ஒருத்தி, இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு கேள்வி. என்னுடைய கண் அணுக்களால் ஆனது, என்னுடைய காது அணுக்களால் ஆனது, என்னுடைய வாய் அணுக்களால் ஆனது,என்னோட மூளை அணுக்களால் ஆனது, என்னோட ஒவ்வொரு உறுப்பும் , எலும்புகளும், ரத்தமும் அணுக்களால் ஆனது. என் உடல் பல கோடி அணுக்களால் ஆனது. சரி, இது இப்படி இருக்க-
என்னோட உடலில் உள்ள எல்லா அணுக்களும் இந்த பிரபஞ்சத்துக்கு சொந்தம். இந்த பிரபஞ்சம் முழுக்க உள்ள அனைத்து அணுக்களும் என் அணுக்களும் ஒரே மாதிரியானது தான். இந்த உடலிலுள்ள அனைத்து அணுக்களும் இப்பிரபஞ்சத்துக்கு சொந்தமானது என்றால்! அப்போ நான் என்பது என்ன?

17 : மூன்று நிலைகள்

ஓம் சாந்தி, சாந்தி,சாந்திஹி
இதன் பொருள்: 'மூன்று உலகும் சாந்தி பெறுவதாக!' என்பதாகும்.
அந்த மூன்று உலகு :
1, நமக்கு வெளியே உள்ள பௌதிகமான புற உலகு - இப்பிரபஞ்சம் முழுமையும். அதன் அனைத்து செயல்களும்.
2, நமது அக உலகு. எண்ணங்கள் உலாவுகிற, எண்ணங்களால் அறியப்படுகிற நமது மனம்.
3,அக உலகான மனதை தாண்டி (மனதின் செயல் கடந்து) துலங்கும் பூரணம். ( நமக்கு மனதை கடப்பதால் பூரணம் துலக்கமாகி அறியப்படுகிறது ) இப்பூரணம் எங்கும் இருக்கிறது.
நமது அக உலகு(அதாவது மனம்) வெளியிலுள்ள புற உலக சக்திகளாலும், ( ஒளி, தட்ப வெட்பம், காந்த புலன்கள், புவி ஈர்ப்பு. அண்ட வெளி ஈர்ப்பு இன்ன பிற சக்திகளாலும்) நமக்குள் இயங்குகிற பூரண தன்மையாலும் இயக்கப்படுகிறது. அதாவது புற - நடு - உள்.

Tuesday, June 1, 2010

16 : அறிவு மடை மாற்றம்

காலை நேரம் யோகா முடிந்து ஆழ்ந்த தியானத்தில் புருவ மத்தியில் ஓர் ஒளிப்பந்து பிரகாசிப்பதை கவனித்து இருப்பீர்கள். அந்த ஒளிப்பந்தை சாட்சி தன்மையாக கவனித்தல் (அறிவு அசைவற்று) (சுவாசமும் அசைவற்று) -still- எவ்வளவு நேரம் நிகழ்வில் இருக்க முடிகிறதோ அதுவே அறிவு மடை மாற்றம். -'பூரண ஒளிப்பிரவாகம்'- அதாவது, முதல் செல் உயிரிலிருந்து, இந்த கணம் வரை உங்கள் அறிவு 'நான்' எனும் (சுய சார்பு) உயிர் வாழ்தலிலேயே நிலை கொண்டிருந்தது- மாறி, அனைத்தும் ஒன்று எனும் பூரணத்துவம் துலங்க துவங்கும் நிகழ்வு.

Saturday, May 29, 2010

15 : ஆத்மா ஒரு விளக்கம்

நீங்கள் அறியும் இந்த உலகு, மாயா கோவ்ச்கியின் புல்லங்குழல்இசை, ஒரு அழகிய பூத்து குலுங்கும் மலர், கள்ளம் கபடு அற்ற,தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி, மத்தியான கொளுத்தும் வெயிலில் ஒதுங்க கிடைக்கும் அடர்ந்த புங்க மரத்து நிழல், அதன் குளும் காற்று , மற்றும் இன்னும் சிறிது நேரத்தில் வெட்டி கொல்லப்பட போகிற அந்த திருவிழா ஆட்டுக்குட்டி, சற்று நேரத்திற்கு முன், விபத்தில் காயமடைந்து அழுது கொண்டிருக்கும் இந்த சிறுவன், இன்னும் எவ்வளவோ, நீங்கள் அறிவது, நீங்கள் உணர்வது (உங்களால் வாழப்படுகிற உங்கள் வாழ்வு) அனைத்தையும் அறியப்படுவது, உணரப்படுவது உங்கள் உள்ளே உள்ள 'உணர்வு தளத்தி'லேதான். இந்த உலகு, இந்த பிரபஞ்சம் எல்லாமே உங்களை பொறுத்த வரையில் , உங்கள் உள்ளேதான் நிகழ்கிறது.
அந்த தளம் தான் , உங்கள் வாழ்வு நிகழும் தளம். உங்கள் வாழ்வின் அனைத்து அர்த்தமும் இதில் மட்டுமே உள்ளது. இந்த உணர்வு தளத்தை நாம் கூர்ந்து கவனித்து அதன் கட்டமைப்பு, அதன் இயக்கம், அதன் தன்மையை அறிவது அவசியம். அது நிறைவு பெறாத நிலையில், (நிறைவை நோக்கிய -குறையின் தவிப்பு) இந்த தவிப்பு உள்ளவரை இவை அனைத்தும் நமக்கு துலக்கமாகிக்கொண்டேயிருக்கும்.
'போதும்' எனும் ஒரு உணர்வால் இந்த தளத்தை நிறைவு செய்ய முடியும். இந்த உணர்வுதளம் நிறைவு நிலையில் நின்றால், உணர்வு தளம் பூரணத்துவம் பெறும்.
அந்த பூரண தன்மையை நோக்கியே , நமது வாழ்வு அந்த ஒருசெல் உயிரியிலிருந்து புறப்பட்டு இன்று வரை, பல்லாயிர பிறவிகள் தொடர்ந்து 'தவித்து'க்கொண்டிருக்கிறது.இதைத்தான் முன்னோர்கள் 'ஆத்மா' என சொல்லியிருக்கிறார்கள்.

Tuesday, May 11, 2010

14 : மூலமும் வியக்தியும்.


மனித உயிரின் தொழில் நுட்பம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நாம் இரட்டையாக இருக்கிறோம். நமக்குள் ஒருவன் இருப்பதை நாம் அறிவோம். நாம் செய்கிற காரியத்தை நாமே உள்ளிருந்து கவனித்துக்கொண்டும் இருப்போம் தெரியுமா? செயல்படுபவன் ஒருவன், கவனிப்பவன் ஒருவன். கவனிப்பவன் வெறும் சாட்சிதன்மையுடன் இருக்கிறான். சாட்சி தன்மையாக இருப்பவன் நமது மூலம். காரியமாற்றுபவன் நமதுவியக்தி.
இந்த பிரபஞ்சத்திலும் இந்த இரட்டை தன்மை உண்டு. மூலம் ஒன்று; வியக்தி ஒன்று. தூய இருப்பே அந்த மூலம். நம் காட்சிக்கு புலனாகும் இந்த பிரபஞ்ச தோற்றமே வியக்தி.