Friday, February 26, 2010

4 : மையம்.

நமக்கு ,
நம் உடலுக்கு ஒரு மைய விசை உள்ளது.
நாம் நடக்கும் போது,
ஓடும்போது,
விளையாடும்போது,
நீந்தும்போது,
ஹைஜம்ப் தாண்டும்போது இதை நாம் நன்கு உணர முடியும்.
நாம் சைக்கிள் ஓட்டும்போது ,
அந்த சைக்கிளின் மைய விசையும், நமது மைய விசையையும்
ஒரே மைய விசையாக்கி,நாம் அவ்வண்டியை ஓட்டுகிறோம்.
நமது மைய விசை , இந்த பூமியின் மைய விசையை சார்ந்து ,
நாம் இயக்குகிறவரையில் நமக்கு எந்த விபத்தும் ஏற்ப்படாமல் நம்மை நாம்பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
இப்படி ,
எனக்கு ஒரு மைய விசை,
உங்களுக்கு ஒரு மைய விசை,
அவரவர் உடலை மையப்படுத்தி அமைகிறது.
இந்த மையவிசை இந்த பூமியின் மைய விசையை சார்ந்து இயங்குகிறது.
நமது பூமியின் மையவிசை,
அதன் குடும்பமான சூரிய குடும்பத்தில், சூரியனை மையப்படுத்தி உள்ளது.
நமது சூரியனோ அதன் பால்வீதி குடும்பத்தை, அதன் மையத்தைசார்ந்து உள்ளது.
நமது பால்வீதி மண்டலமோ,
இதைப்போன்ற கோடிக்கணக்கான மண்டலங்களை உள்ளடக்கிய,
ஒரு தொகுப்பின் மையத்தை சார்ந்து உள்ளது.
இதுபோன்ற, அண்டதொகுதிகள் கோடிக்கணக்கில் உள்ளது.
நமது அண்ட தொகுதி, இந்த கூட்டு தொகுதிகளின் மையத்தை சார்ந்து இயங்குகிறது.
இந்த கூட்டு தொகுதியோ,
நமது பிரபஞ்சத்தின் மைய விசையை சார்ந்து இயங்குகிறது.
சுருங்கி விரிவடையும் நம் பிரபஞ்சமோ,
நிலையான ஒரு இருப்பின் மையத்தை சார்ந்துதொடர்ந்து இயங்கி வருகிறது.
இதுவரை சொன்ன
நான், நீங்கள், சைக்கிள், பூமி, சூரியன், பால்வீதி மண்டலம், மண்டலங்களின் தொகுதி, மண்டல கூட்டுத்தொகுதி, இப்பிரபஞ்சம் யாவும் திடபொருட்களால் ஆனது.
அந்த தூய இருப்பு நிலையோ உருவமற்றது.
அது எப்போதும் மாற்றமடைவது கிடையாது.
அது நிலையானது.
அந்த நிலையான ஒன்றை சார்ந்துதான் இத்தனை நிலையற்றவைகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

Tuesday, February 2, 2010

3 : அகம் - புறம் - சமம்

நமது நோக்கம் மூன்று வழிகளில் செயல்பட முடியும்.

அக நோக்கமாகவும்,

புற நோக்கமாகவும்,

மற்றும் சம நோக்கமாகவும்.

நாம் புறநோக்காகவே இந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளோம்.

நம்மில் மட்டும் என்றில்லை -

இந்த பிரபஞ்சத்துக்கும்,

அக நோக்கு, புற நோக்கு, சம நோக்கு என மூன்று நோக்கு உள்ளது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் முழுவதும் அணுக்களால் ஆனது.

அனைத்து பொருட்களுக்கும் அததற்குண்டான அணு கட்டமைப்பு உண்டு.

அணுவின் அடிப்படை,

மூன்று வித 'மின்' செயலாக உள்ளது.

1.நிலை மின் (neutron),

2. நேர் மின் (proton),

3.எதிர் மின்(electron).

நமது மன ‘எண்ணமும்’

மின்னோட்டத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.

நமது (அக, புற, சம ) நோக்கை, எண்ணத்தின் வாயிலாகவே மடை மாற்ற முடியும்.