Saturday, January 30, 2010

2 : நிலமும் விதையும்

ஈர நிலத்தில் விழும் விதை
 எப்படி
 தவறாமல் முளைத்து, விளைந்து, பலனை தருகிறதோ,

அதே மாதிரி

 உங்கள் மனதில் விழும் எண்ணங்களும்
 விளைந்து விருத்தியாகும்.

இப்போது உள்ள நீங்கள்,

 ஏற்கனவே
 உங்கள் எண்ணமெனும் விதையால் முளைத்து,
 விளைந்து,விருத்தியாகி நிற்கும்
'சதைக்கோளம்' தான்.

Wednesday, January 27, 2010

1 : நமது மூலம்.


சகோதர, சகோதரிகளே வணக்கம்.

இந்த வாழ்க்கைக்கு 'விளக்கம்' என்ன?

இந்த வாழ்க்கையை வாழ்வது யார்?

நாம்தான் வாழ்கிறோம்.

சரி!

நாம் யார்? நமது மூலம் என்ன?

நாம், நம் தாய், தந்தை வழியே -இணையப்பெற்று வந்துள்ளோம்.

சரி!

தாய்,தந்தையரின் மூலம் என்ன?

நம் தாய் உருவாக இரண்டு பேர் காரணம். அவளது தாய் மற்றும் தந்தை.
நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம். அவனது தாய் மற்றும் தந்தை.

ஆக! நான்கு பேர்.

அந்த நான்கு பேர் உருவாக, அந்த நான்கு பேரின் தாய் தந்தையென எட்டு பேர்.

இப்படி,

2 – 4 – 8 – 16 – 32 – 64 – 128 – 256 – 512 - 1024 .

(இந்த ‘1024’ என்பது நம்ம CD மெமரி மாதிரி தெரிகிறதல்லவா? 1024 பைட்ஸ்( BITS)- ஒரு கிலோ பைட்ஸ்( K B) – 1024 கிலோ பைட்ஸ் - ஒரு மெகா பைட்ஸ் ( MB)-1024 மெகா பைட்ஸ் - ஒரு ஜிகா பைட்ஸ்( GB) இந்த 1024 என்பது ஒரு'தனி'முழு சுழற்சி போல தோன்றுகிறது. )

இந்த பெருகி விரியும் முன்னோர் சந்ததி இப்படி இரு வேறு புறத்திலும் விரிவடைகிறது.

ஆக! நாம் என்னவோ முப்பாட்டன், பாட்டன், அப்பன், பிறகு நான், எனக்கு அடுத்தது என் மகன்என, இந்த மரபுஒரே வழியாக , நேரிடையாக வரும் மரபு என நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு.

அது நேரிடையான மரபு இல்லை.

உன் முன்னோர்கள் என சொன்னால் அது ‘ஒரு நதி’யின் நீரோட்டமல்ல!

அந்த நதி தாய், தந்தை என இரண்டு கிளை பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால், அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள் இப்படி 1024 கிளைகள் வரையும் போகிறது .

இரு வேறு விரிவு அடுக்குகளிலிருந்து வரும் 'உயிர் பண்புக்கூறு நிழல் விசைகள்' ஒன்றை ஒன்று
சந்திக்குமிடத்து - பதிவாகி உருவாகும் உயிர் 'நாம்'.

நமது மூலம்
ஒரு வழிப்பாதை அல்ல!
இரு 'வேறு' வழிப்பாதை!.

நம் இடப்புற பாதையிலும் , வலப்புற பாதையிலும்
இருவேறு உலகங்கள் அகண்டு ,விரிந்து, பரவுகிறது.